
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406ஆக அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
இதையும் படிங்க;- petrol diesel price today: பெட்ரோல் ரூ.40க்கு வரும்னு சொன்னிங்க? 'வாயைமூடு' நிருபரை எச்சரித்த பாபா ராம்தேவ்
சிலிண்டர் விலை உயர்வு
இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள இந்த சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விரையும் எந்த மாற்றமும் இல்லை. 14.2 கிலோ எடை உள்ள வீட்டு எபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.965.50ஆக தொடர்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.