share market today: முதலீட்டாளர்களை அலறவிட்ட ஆர்பிஐ: பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1300 புள்ளிகள் காலி

Published : May 04, 2022, 04:01 PM IST
share market today: முதலீட்டாளர்களை அலறவிட்ட ஆர்பிஐ: பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1300 புள்ளிகள் காலி

சுருக்கம்

share market today : ரிசர்வ் வங்கிகவர்னர் சக்திகாந்த தாஸ் திடீரென கடனுக்கான வட்டிவீதத்தை 40 புள்ளிகளை உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.

 ரிசர்வ் வங்கிகவர்னர் சக்திகாந்த தாஸ் திடீரென கடனுக்கான வட்டிவீதத்தை 40 புள்ளிகளை உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. 

ஆர்பிஐ அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் பிற்பகல் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடனே பங்குச்சந்தையில் பதற்றம் தொற்றிக்கொண்டு ஊசலாட்டம் நிலவியது. அதுமுதல் சரிவு படிப்படியாக வளர்ந்து. கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்தியதும் முதலீட்டாளர்கள் அச்சமடைந்து பங்குகளை விற்கத் தொடங்கியதால், மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. 

அமெரிக்க அறிவிப்பு வருகிறது

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்துவோம் என பெடரல் வங்கி தெரிவித்துள்ளது. நாளை பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டீவீதம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

அதேநேரம், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு, வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களும் இன்று வெளியாகின்றன. இதை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் பங்குகள் ஆர்வம் செய்வதை தவிர்த்து வந்தனர். ஆர்சிபிஐ அறிவிப்பு, பெடரல் வங்கி அறிவிப்பு வரும்பட்சத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளில்முதலீடு செய்வது குறித்து யோசிப்பார்கள்.

எல்ஐசி ஐபிஓ

மேலும் எல்ஐசி ஐபிஓ விற்பனை பொது முதலீட்டாளர்களுக்கு இன்று முதல் பங்கு விற்பனை தொடங்கியது. காலை முதலே பங்கு விற்பனை ஜோராக நடந்து வந்தது. ரிசர்வ் வங்கிஅறிவிப்புக்குப்பின் நாளை சந்தையில் என்ன மாற்றம் நிகழும் என்பது தெரியவில்லை.

வீழ்ச்சி

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1306 புள்ளிகள் சரிந்து, 55,669 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 391 புள்ளிகள் குறைந்து, 16,677 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.  நிப்டியில் அனைத்து துறைகளும் சரிவில் முடிந்தன. ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, மின்சக்தி, உலோகம், ரியல்எஸ்டேட், சுகாதாரம், முதலீட்டுப் பொருட்கள்  ஆகிய துறைகள் சரிந்தன

25 பங்குள் வீழ்ச்சி

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 5 நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன. ஓஎன்ஜிசி, பிரிட்டானியா, பவர்கிரிட், என்டிபிசி, கோடக்வங்கிப் பங்குகள் லாபத்தில் முடிந்தன.  25 பங்குகள் சரிவிலும் முடிந்தன. 825 பங்குகள் மதிப்பு உயர்வுடனும், 2454 பங்குகள் மதிப்பு சரிந்தும், 98 பங்குகள் மதிப்பு சரியாமலும் உள்ளன 

நிப்டியும் சரிவு
நிப்டியில் அப்பலோ மருத்துவமனை, அதானி போர்ட்ஸ், ஹின்டால்கோ பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் சரிவில் முடிந்தன.  ஓன்ஜிசி, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், , என்டிபிசி, கோடக்மகிந்திரா, பவர்கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் முடிந்தன
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 பங்குகளில் பஜாஜ் பின்சர்வ், பைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன், இந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎப்சி, சன்பார்மா, டாக்டர் ரெட்டீஸ், பார்தி ஏர்டெல் பங்குகள் சரிவில் முடிந்தன. பவர்கிரிட், என்டிபிசி பங்குகள் லாபமடைந்தன

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

புதிய தொழிலாளர் சட்டத்தால் 'டேக் ஹோம்' சம்பளம் குறையுமா? மத்திய அரசு விளக்கம்!
அடேங்கப்பா! ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகையா.. முழு விவரம்! நோட் பண்ணிக்கோங்க!