rbi governer today: கடன் வாங்கியவர்களுக்கு ஷாக்: கடனுக்கான வட்டிவீதம் 40பிபிஎஸ் உயர்வு: ஆர்பிஐ அறிவிப்பு

Published : May 04, 2022, 02:30 PM IST
rbi governer today: கடன் வாங்கியவர்களுக்கு ஷாக்: கடனுக்கான வட்டிவீதம் 40பிபிஎஸ் உயர்வு: ஆர்பிஐ அறிவிப்பு

சுருக்கம்

rbi governer today : குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம் 40 புள்ளிகளை உயர்த்துவதாகவும், இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார்.

குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம் 40 புள்ளிகளை உயர்த்துவதாகவும், இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்தாமல் 4 சதவீதமாகவை வைத்திருந்தது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச்ச மாதத்திலிருந்து வட்டிவீதத்தை மாற்றவில்லை. 

ஆனால், நாட்டில் பணவீக்கத்தின் அளவு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட கடந்து 6 சதவீதத்தைக் கடந்தபின்பும் வட்டிவீதம் உயர்த்தாதது பல்வேறு கேள்விகளை பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் எழுப்பியது.

மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லரைப் பணவீக்கம் 6.95சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்த நிலையில் அதைவிட அதிகரித்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறியது.

ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளது. ஆனால், மார்ச் மாதத்தில் பணவீக்கம் 6.95% அதிகரித்துள்ளதால், ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் நடக்க இருக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

சில்லரைப் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் அதிகமாக தொடர்ந்து ஜனவரியிலிருந்து 3-வது மாதமாக உயர்ந்தது. இதில் கடந்த 2021 மார்ச் மாதம் இருந்த பணவீக்க அளவைவிட, 2022 மார்ச் மாதத்தில் பணவீக்கம் இருமடங்காக அதிகரி்த்துள்ளது.

2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை வந்தபோது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் திடீர் அறிவிப்பு வெளியிட்டார். வட்டி வீதம் அதிரடியாக 40 பிபிஎஸ் குறைக்கப்பட்டது அதன்பின் வட்டிவீதம் குறைக்கப்படவில்லை.

இதற்கிடையே ஏப்ரல் மாதமும் முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதத்திலும் பணவீக்கம் நிச்சயமாக 6 சதவீதத்தைக் கடந்து செல்லும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கடனுக்கான வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று அறிவித்தார்.
இதையடுத்து குறுகிய  காலக் கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வால் வீட்டுக்கடன், வாகனக் கடன் வாங்கியிருக்கும் மக்கள் இனிமேல் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டியதிருக்கும்.


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Business: மாதத்திற்கு ரூ.50,000 வருமானம் ஈட்டலாம் ஈசியா! லாபத்தை அள்ளித்தரும் கீரை சாகுபடி.!
நில மோசடிக்கு இனி வாய்ப்பே இல்லை.! பத்திரப்பதிவில் வந்தது அதிரடி மாற்றம்.!