
எல்ஐசி ஐபிஓ விற்பனை வரும் சனிக்கிழமையும் நடக்கும். முதலீட்டாளர்களை ஈர்க்கவும் அவர்களி்ன் வசதிக்காகவும் சனிக்கிழமையும் விற்பனை நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகலில் 3.5 சதவீதப் பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட இருக்கிறது.
மே 2-ம் தேதி எல்ஐசி ஐபிஓ ஆங்கர் முதலீ்ட்டாளர்களுக்காகத் தொடங்கியது. மே 4ம் தேதி முதல் 9ம் தேதிவரை பொது முதலீட்டாளர்களுக்கும் ஐபிஓ வெளியிடப்படுகிறது. ஆங்கர் இன்வெஸ்டர்ஸ் மூலம் ரூ.5600 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு பங்கு விற்பனையில் 10 சதவீதமும், ஊழியர்களுக்கு 5 சதவீதமும் ஒதுக்கப்படும். ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு செட் பங்கில் 15 பங்குகள் இருக்கும் இதேபோன்று 15 மடங்காக வாங்க வேண்டும்.
இந்நிலையில் 2-ம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனை நடந்தது. ஏறக்குறைய 5.93 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டன, இதில் 123 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். ஒரு பங்கு விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 5 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரத்து 853 பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் 4 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 610 பங்குகள் அதாவது 71 சதவீதப் பங்குகளைஉள்நாட்டில் உள்ள 15 பரஸ்பர நிதி நிறுவனங்களை 99 திட்டங்களின் கீழ் வாங்கின என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது முதலீட்டாளர்களுக்கான ஐபிஓ இன்று தொடங்கியது. இதில் பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இ்ந்த பொது முதலீட்டாளர்களுக்கான ஐபிஓ வரும் 9ம் தேதி வரை நடக்கும்.
இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி, பொதுமுதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீட்டில் 35 சதவீதம் புக்கிங்ஆகியுள்ளன. இதில் பாலிசிதார்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில் 1.5 மடங்கு கூடுதலாகபுக்கிங் ஆகியுள்ளது. எல்ஐசி ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குளில் 58 சதவீதம் புக்கிங்கும், சில்லரை முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு பங்குகளில்36 சதவீதமும் புக்கிங் ஆகியுள்ளது.
இதற்கிடையே முதலீட்டாளர்களை அதிக அளவு ஈர்க்கும் நோக்கில், வரும் சனிக்கிழமையும் பங்கு விற்பனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெல்த்மில்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சந்தை தலைமை வல்லுநர் கிராந்தி பதானி கூறுகையில் “ பங்கு விற்பனையில் எப்போதும் இல்லாத போக்கு காணப்படுகிறது. எல்ஐசி ஐபிஓவின் அளவு, சில்லரை முதலீட்டாலர்களிடம்இருந்து வரும் ஆர்வம் ஆகியவற்றுக்காக விலக்கு அளி்க்கப்பட்டது. இது பங்குவிற்பனை முறைக்கே கூடுதல் அழுதத்தைத் தரும். ஆதலால் இந்த நெருக்கடியைச் சமாளிக்க சனிக்கிழமையும் பங்கு விற்பனை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.