
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடந்த 9 வாரங்களில் இல்லாத வகையில் மோசமான சரிவை இன்று எதிர்கொண்டன. முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது
பெடரல் வங்கி
அமெரிக்காவில் அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி நடவடிக்கை எடுத்து வட்டி வீதத்தை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவிலிருந்து அந்நிய முதலீ்ட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று அங்கு முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
இதன்காரணமாக, டாலர் குறியீடு தொடர்ந்து வலுப்பெற்று 104 ஆக அதிகரித்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து வரலாற்று வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
பணவீக்க புள்ளிவிவரம்
ஏப்ரல் மாதத்தில் நாட்டில் சில்லரை பணவீக்கம் 7 சதவீதத்துக்கும் மேல்அதிகரி்க்கும் என்ற கருத்து நிலவுகிறது. அவ்வாறு இருந்தால், ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற கருத்து முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இது தவிர ரஷ்யா உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, அந்நியச் செலாவணி வெளியேற்றம், ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாகின
இதனால் பங்குச்சந்தை தொடங்கியவுடனே வர்த்தகம் சரிவுடன் ஆரம்பித்தது. மும்பைப் பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து பின்னர் மீண்டது. இந்த சரிவு வர்த்தகம் கடைசி வரை தொடர்ந்தது
மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1158 புள்ளிகள் வீழ்ந்து, 52,930 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 359 புள்ளிகள் சரிவுடனும்15,808 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது.
முதலீட்டாளர்களுக்கு இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் ரூ.5 லட்சம் கோடி காலி: ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து இதுவரை ரூ.34 லட்சம் கோடி இழப்பு. வர்த்தகம் நேற்று முடியும்போது சந்தை மதிப்பு ரூ.246.31 லட்சம் கோடி இருந்த நிலையில் இன்று காலை சரிவுக்குப்பின், ரூ.241.15 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது
30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் விப்ரோ, ஹெச்சிஎல் நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன மற்ற 28 பங்குகளும் சரிந்தன. இன்டஸ்இன்ட் வங்கி, அதானி போர்ட் பங்குகள் 6சதவீதம் சரிந்தன. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ட்வின்ஸ், ஹின்டால்கோ, ஆக்சிஸ் வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், எஸ்பிஐ ஆகிய நிறுவனப்பங்குகள் சரிந்தன
பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி, லார்சன் அன்ட் டூப்ரோ, டைட்டன், ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, டெக் மகிந்திரா, மகிந்திரா அன்ட் மகிந்திரா பங்குகள் 3 சதவீத சரிவில் உள்ளன. பிரிட்டானியா, அப்பலோ மருத்துவமனை, டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் நிப்டியில் சரிவில் உள்ளன. பவர்கிரிட், ஓஎன்ஜிசி, என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ பங்குகள் லாபத்தில் உள்ளன. நிப்டியில் அனைத்து துறைகளும் சரிவில் முடிந்தன.
டாலருக் குஎதிராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவுடன் ரூ.77.55க்கு வர்த்தக நேரத்தில் கைமாறியது. மாலை வர்த்தகம் முடிவில் நேற்றைய மதிப்பான ரூ.77.23 பைசாவைவிட 19 காசுகள் குறைந்து, ரூ.77.42 க்கு முடிந்தது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.