ரயிலில் பயணிக்க ஐஆர்சிடிசி தளத்தில் ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, ஆன்-லைனில் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்களின் செல்போன் எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியை கண்டிப்பாக வழங்க வேண்டும். தகவல் சரிபார்ப்பு உறுதி செய்யப்படாமல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்குப்பின் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் தங்கள் செல்போன், மின்அஞ்சலைக் குறிப்பிட வேண்டும்.
எவ்வாறு மின்அஞ்சல் மற்றும் செல்போன் எண்களை சரிபார்த்து டிக்கெட் முன்பதிவு செய்வது?
1. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் லாகின் செய்ய வேண்டும்
2. வெரிபிகேஷன் தளத்தை திறக்க வேண்டும்
3. பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்.
4. பதிவு செய்த செல்போன் எண் அல்லது மின்அஞ்சல் முகவரியில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினார் இணையதளத்தின் வலது பக்கத்தில் எடிட் பட்டன் இருக்கும் அதில் திருத்தம் செய்யலாம்
5. செல்போன் எண், மின்அஞ்சல் இரண்டையும் திருத்த வேண்டுமென்றால் எடிட் பட்டனை அழுத்தி திருத்தலாம். அல்லது சரிபார்ப்புக்குச்செல்லலாம்
6. பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்
7. ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்
8. சரிபார்ப்பை உறுதிசெய்ய மின்அஞ்சலுக்கும் இதேபோன்று ஓடிபி அனுப்பப்பட்டிருக்கும் அதைப் பதிவு செய்து உறுதி செய்யலாம்
எவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்வது
1. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியைத் திறக்க வேண்டும்
2. சரியான யூஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்
3. புறப்படும் இடம், சென்றடையும் இடம், பயணத் தேதி உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும்
4. ரயில் பெயரைத்தேர்ந்தெடுக்க வேண்டும்
5. முன்பதிவு(புக்நவ்) செய்ய வேண்டும்
6. பயணிகள் பெயர், வயது, பாலினம், படுக்கை தேர்வு ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்
7. டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் வசதியை தேர்வு செய்ய வேண்டும்
8. பணம் செலுத்தும் விதத்தை தேர்வு செய்ய வேண்டும்
9. பணம் செலுத்தியபின் டிக்கெட்உறுதியாகும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.