air india ceo: tata sons: ஏர் இந்தியாவின் புதிய சிஇஓவாக 26 ஆண்டு அனுபவம் வாய்ந்த கேம்பல் வில்சன்: யார் இவர்?

By Pothy RajFirst Published May 12, 2022, 4:00 PM IST
Highlights

air india ceo: tata sons : டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி, மேலாளராக 26 ஆண்டுகள் அனுபவம் மிக்க கேம்பல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி, மேலாளராக 26 ஆண்டுகள் அனுபவம் மிக்க கேம்பல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

50 வயதாகும் வில்சனுக்கு விமானப் போக்குவரத்து துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. குறிப்பாக குறைந்த செலவில் இயக்கப்படும் விமானங்களை நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பான், கனடா, ஹாங்காங் நாடுகளில் வில்சன் பணிபுரிந்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு நியூஸிலாந்தில் உள்ள எஸ்ஐஏ நிறுவனத்தில் பயற்சியாளராகத் தொடங்கி படிப்படியாகவில்சன் உயர்ந்துள்ளார்.

டாடாவின் விஸ்தாரா விமானநிறுவனத்துடன் எஸ்ஐஏ நிறுவனம் கூட்டாளியாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்ஐஏ நிறுவனத்தின் சார்பில் கனடா, ஹாங்காங், ஜப்பானில் பணியாற்றி 2011ம் ஆண்டு சிங்கப்பூருக்கு வில்சன் மாற்றப்பட்டார். அதந்பின் ஸ்கூட் என்ற விமான நிறுவனத்தின் செயல்அதிகாரியாக வில்சன் நியமிக்கப்பட்டார். இந்த ஸ்கூட் விமானமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்நிறுவனத்தின் ஒருபிரிவுதான் என்பது குறிப்படித்தக்கது. 

அதன்பின் அந்த நிறுவனத்தின் மூத்த தலைவராக இருந்த வில்சன் விற்பனை, சந்தைப்படுத்துதல், விலைநிர்ணயம், பகிர்மானம், இவர்த்தகம், பிராண்டிங், என அனைத்தையும் கவனித்தார். அந்தப் பணிக்குப்பின்புதான் 2020ம் ஆண்டு ஸ்கூட் நிறுவனத்தின் சிஇஓவாக வில்சன் நியமிக்கப்பட்டார்

நியூஸிலாந்தில் உள்ள கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தவர் வில்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா நிறுவனத்தை  ரூ.18 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு அதிகாரபூர்வமாக விற்பனை செய்து, டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய நிர்வாக இயக்குநராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில் துருக்கி ஏர்லைஸ் முன்னாள் மேலாண் இயக்குநர் இல்கர் ஐஸி கடந்த பிப்ரவரி 14ம் தேதி நியமிக்கப்பட்டார். ஏர் இந்தியாவின் சிஇஓவாகவும், மேலாண் இயக்குநராகவும் ஐஸி நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பு கடந்த எதிர்ப்புத் தெரிவித்ததால், தனது நியமனத்தில் சாயம் பூசப்படுகிறது எனக் கூறி அந்தப் பதவியை ஏற்க ஐஸி மறுத்துவிட்டார்.

இ்ந்நிலையலி், ஏர் இந்தியாவின் புதிய சிஇஓவாக, டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இனிமேல் அந்தப் பொறுப்பு வில்சனுக்கு மாற்றப்படும்.

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் கூறுகையில் “ இந்தியாவுக்கும், ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் வரும் கேம்பெலை நான் வரவேற்கிறேன். சர்வதேச அளவில் விமானத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் வில்சன். ஆசியாவில் சிறந்த பிராண்ட்நிறுவனத்தை கட்டமைக்க அவரின் அனுபவம் ஏர் இ்ந்தியா நிறுவனத்துக்கு நிச்சயம் உதவும். உலகத் தரம் வாய்ந்த விமானநிறுவனத்துடன் அவர் பணியாற்றவருவதை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்

click me!