மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று ஏறுமுகத்துடன் துவங்கியது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் இடம் பெற்று இருக்கும் பங்குகள் இன்று ஏற்றத்துடன் காணப்பட்டன. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 535 புள்ளிகள் அல்லது 0.82 சதவீதம் உயர்ந்து 65,469 ஆக வர்த்தகத்தை துவங்கியது. அதே நேரத்தில் என்எஸ்இ எனப்படும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 170 புள்ளிகள் அல்லது 0.88 சதவீதம் அதிகரித்து 19,614 ஆக வர்த்தகத்தை துவக்கியது. நிஃப்டி மிட்கேப் 100 0.75 சதவீதம் மற்றும் ஸ்மால் கேப் 1.04 சதவீதம் உயர்ந்ததால் பங்குகள் நேர்மறையாக இருந்தன.
நிஃப்டியில் இடம் பெற்று இருக்கும் 50 நிறுவனங்களில் ஹிண்டால்கோ, எல்டிஐஎம், டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் டாடா ஸ்டீல் லாபத்துடன் வர்த்தகத்தை இன்று துவக்கியது. மறுபுறம், பிரிட்டானியா, பவர் கிரிட், சன் பார்மா, அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் எம்&எம் ஆகியவற்றின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.
Sahara Group Founder Died: சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்..!
இன்றைய சந்தை தொடக்கத்திற்கு முன்னதாக, சாய்ஸ் புரோக்கிங் ஆய்வாளர் தேவன் மெஹட்டா இந்தியா டுடேவுக்கு அளித்திருந்த பேட்டியில், ''அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பணவீக்கம் தணிந்து வருவதால், நவம்பர் 15-ம் தேதி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்வைத் தொட்டுள்ளன.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பணவீக்கம் குறைந்து வருகிறது. சந்தை மேலும் உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களுடைய நீண்ட நாள் பங்குகளை தக்க வைத்துக் கொள்வது நல்லது'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மணப்புரம் ஃபைனான்ஸ், நாராயண ஹருதயாலயா, தி பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் யெஸ் வங்கி ஆகியவை 7.19 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டன. சென்செக்ஸில் இடம் பெற்று இருந்த 30 நிறுவனங்களில் ஹெச்டிஎப்சி வங்கி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
SIP முதலீட்டில் ரூ.10 கோடி சம்பாதிப்பது எப்படி? இத பண்ணுங்க போதும்..!