பிக் புட்சரிங் ஸ்கேம் என்றால் என்ன? மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்; ஜெரோதா சிஇஓ நிகில் காமத் எச்சரிக்கை!!

By Dhanalakshmi G  |  First Published Nov 14, 2023, 11:40 AM IST

ஏமாற்று பேர் வழிகள் பல வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவற்றில் ஒன்று பிக் புட்சரிங் ஸ்கேம் என்று ஜெரோதா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காமத் தெரிவித்துள்ளார்.


பிக் புட்சரிங் ஸ்கேம் 'pig butchering scam' வாயிலாக பல கோடிகள் ஏமாறுபவர்களிடம் இருந்து பறிக்கப்படுவதாக நிகில் காமத் எச்சரிக்கிறார். இந்த மோசடியில் வேலை வாங்கிக் தருவதாக கூறுவது, போலி கிரிப்டோ முதலீடு, உயர் முதலீட்டு திட்டங்கள் என்று ஏமாற்றப்படுகின்றனர். அதாவது ஏமாற்றப்படுவதற்கு முன்பு பலியாகிறவர்களை அனைத்து வகையிலும் ஏமாற்றுப் பேர் வழிகள் தங்களை நம்ப வைக்கின்றனர்.

இதுகுறித்து நியூஸ் 18 ஆங்கில இணையத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், ''தங்களது வலைக்குள் வருகிறவர்களிடம் அன்பு காட்டுவது, நம்பிக்கையை பெறுவது, நண்பர்களாக்குவது என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. பின்னர் அவர்களிடம் இருந்து பணம் பறிப்பது, வேலை வாங்கித் தருவதாக பொய் வாக்குறுதிகள் கொடுப்பது, அதிக வட்டி கிடைக்கும் என்று பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவது என்பது தொடரும். இந்த மோசடி உலகளவில் நடந்து வருகிறது.

Latest Videos

undefined

மனைவியை பிரியும் ரேமண்ட் குழுமத் தலைவர் கவுதம் சிங்கானியா!

இத்துடன் ஏமாற்றங்கள் ஏமாறுபவர்களுக்கு  நின்று விடுவதில்லை. போலி வேலை வாய்ப்பு உத்தரவாதத்தின் கீழ் வெளிநாடு செல்பவர்கள் அங்கும் ஏமாற்றப்படுவார்கள். அங்கும் சிறை பிடிக்கப்படுவார்கள். பின்னர்தான் தாங்கள் குண்டர்களால் ஏமாற்றப்பட்டதை உணருகின்றனர். அங்கும் மக்களை ஏமாற்றுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். மேலும் எதிர் பாலினத்தை ஏமாற்றுவதற்காக பெண்கள் மற்றும் சிறுவர்களின் போலி சுயவிவரங்களை உருவாக்குகிறார்கள்'' என்கிறார் காமத்.

இந்த மோசடியில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது: 

*    சமூக ஊடகங்கள், ஆப்களில் வேலை வாய்ப்புகள் அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.

*    வெளிநாட்டு லிங்குகளை பதிவிறக்கம் செய்யவோ அல்லது கிளிக் செய்யவோ வேண்டாம்.

*    எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்; அது உங்களை காப்பாற்ற உதவும் 

* OTPகள் அல்லது ஆதார் எண் போன்ற முக்கியமான தனிப்பட்ட ஐடிகளை ஒருபோதும் பகிர வேண்டாம்.

இந்திய விருந்தோம்பல் துறையின் முக்கியமான நபர், ஓபராய் குரூப் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார்..

click me!