களைகட்டிய தீபாவளி முகூர்த்த வர்த்தகம்! பங்குச்சந்தையில் அனைத்து துறைகளும் ஏறுமுகம்!

By SG Balan  |  First Published Nov 12, 2023, 7:38 PM IST

சென்செக்ஸ் 354.77 புள்ளிகள் அல்லது 0.55 சதவீதம் அதிகரித்து 65,259.45 ஆக முடிந்தது. நிஃப்டி 0.52 சதவீதம் அல்லது 100.20 புள்ளிகள் அதிகரித்து 19,525.55 ஆக நிறைவு கண்டது.


தீபாவளி பண்டிகை நாளான இன்று பங்குச்சந்தையில் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7:15 வரை நடைபெற்றது.

சென்செக்ஸ் 354.77 புள்ளிகள் அல்லது 0.55 சதவீதம் அதிகரித்து 65,259.45 ஆக முடிந்தது. நிஃப்டி 0.52 சதவீதம் அல்லது 100.20 புள்ளிகள் அதிகரித்து 19,525.55 ஆக நிறைவு கண்டது. இதன் மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் லாபம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

Latest Videos

undefined

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளும் லாபத்தை அடைந்துள்ளன. எண்டிபிசி, இன்ஃபோசிஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தை அடைந்தன. நிஃப்டி 50 குறியீட்டில், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் அதிக பட்ச லாபம் பெற்றுள்ளன. ஓஎன்ஜிசி பங்குகளுக்கும் ஆதாயம் கிடைத்துள்ளது. ஓஎன்ஜிசியின் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக 1.3% உயர்ந்திருக்கின்றன.

தீபாவளிக்குத் தங்கம் வாங்கப் போறீங்களா? டிஜிட்டல் கோல்டு ஆஃபரைப் பாத்துட்டு பர்சேஸ் பண்ணுங்க!

பங்குச்சந்தையின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளதால், பல பங்குகள் இதுவரை இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளன.  ஹெச்டிஎப்சி வங்கி, எல்&டி, டாடா மோட்டார்ஸ், இண்டிகோ, டாடா பவர், கிராம்டன் கிரீவ்ஸ், உஷா மார்ட்டின், டூட்லா டைரி, எல்ஜி போன்ற நிறுவனங்கள் உட்பட 12 பங்குகள் சமச்சீர் முதலீட்டுத் திறனைப் பெற்றுள்ளன.

இன்ஃபோசிஸ் 1.45% அதிகரித்து, நிஃப்டி ஐடி லாபத்தில் முதலிடத்தில் உள்ளது. எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் ஆகியவை நிஃப்டி 50-ன் உயர்வுக்கு அதிக பங்களிப்பை வழங்குகின்றன.  நிஃப்டி ரியாலிட்டி இன்டெக்ஸ் 0.9% அதிகரித்தது. ஸ்வான் எனர்ஜி, மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ், ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

click me!