Share Market Today: உற்சாகத்தில் பங்குச்சந்தை!சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது

By Pothy RajFirst Published Nov 28, 2022, 9:51 AM IST
Highlights

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை மந்தமாக வர்த்தகத்தை தொடங்கி பின்னர் சிறிது நேரத்தில் சரிவிலிருந்து மீண்டது

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை மந்தமாக வர்த்தகத்தை தொடங்கி பின்னர் சிறிது நேரத்தில் சரிவிலிருந்து மீண்டது

கடந்த வாரத்தில் கடைசி 3 நாட்கள் பங்குச்சந்தையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் ஒவ்வொரு நாளும் பங்குகளை வாங்கியதால், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வரலாற்று உச்சமடைந்தது. நிப்டியும் புதிய மைல்கல்லை எட்டியது.

ஆனால், அந்த உயர்வை இன்று காலை முதல் இந்தியச் சந்தைகள் தக்கவைக்கவில்லை. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் சரிந்தது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18,500புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. . ஆனால் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சரிவிலிருந்து மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன. 

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 97 புள்ளிகள் உயர்வுடன் 62,391 புள்ளிகளில் வர்தத்கத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 26 புள்ளிகள் ஏற்றத்துடன், 18,538 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

இந்தியச் சந்தைகள் ஏற்றத்துடன் செல்வதற்கு இரு முக்கியக் காரணங்கள் வலுவாகப் பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து பேரல் 82 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமைடந்துள்ளாதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரநிலைக்கு சாதகமானதாகும்.

உற்சாகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி உயர்வு: டாடா பங்குகள் லாபம்!காரணம் என்ன?

 2வதாக அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் பங்குகளை வாங்குவது அதிகரி்த்துள்ளது, இந்த மாதத்தில் இதுவரை 31,630 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சாதகமான போக்கை காண்பிக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐடி, நிதிச்சேவை, ஆட்டோமொபைல், முதலீட்டுப் பொருட்களில் முதலீடு அதிகரி்த்துள்ளது.

பங்குச்சந்தையில் மந்தமான போக்கு ! சென்செக்ஸ், நிப்டி சுணக்கம்: PSU வங்கி பங்கு லாபம்!

வரும் புதன்கிழமை அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பு வரவுள்ளது. இந்தக் கூட்டத்தை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளார்கள். 

மும்பைபங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 10 நிறுவனப் பங்குகள் சரிவிலும், 20 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் உள்ளன. ரிலையன்ஸ், மாருதி, ஏசியன்பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பார்திஏர்டெல், பஜாஜ்பின்சர்வ், கோடக்மகிந்திரா, விப்ரோ, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பவர்கிரிட், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

2வது நாளாக உச்சம் தொட்ட பங்குச்சந்தை ! சென்செக்ஸ், நிப்டி உயர்வு: ரியல்எஸ்டேட் பங்கு லாபம்

நிப்டியில் ஆட்டோமொபைல் பங்குகள் விலை உயர்ந்தும், உலோகத்துறை பங்குகள் விலை குறைந்துள்ளன.குறிப்பாக ஹீரோமோட்டார் பங்குகள் விலை 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. டாடாமோட்டார்ஸ், பஜாஜ்ஆட்டோ, டிவிஎஸ், அசோக்லேலண்ட் பங்குகள் விலையும் உயர்ந்துள்ளன.

click me!