மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் டிசம்பர் 17ம் தேதி கூடுகிறது
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் டிசம்பர் 17ம் தேதி கூடுகிறது
இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடத்தப்படுகிறது என்று ஜிஎஸ்டி கவுன்சில் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கடையை மூடும் அமேசான் ! இந்தியாவில் உணவு டெலிவரி சேவையையும் நிறுத்துகிறது
இ்ந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதிஅமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரையான சூதாட்ட கிளப்புகள், ஆன்லைன் கேம், குதிரைப்பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீதம் வரிவிதிக்க வேண்டும் என்ற அறிக்கை ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படலாம்.
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளிட்ட அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவினர் சேர்ந்து கடந்த வாரம் வரிவிதிப்பு குறித்து ஆலோசித்து பரிந்துரைகளை இறுதி செய்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களில் பெரும்பாலானோர், ஆன்லைன் கேமுக்கு 28சதவீதம் வரிவிதிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஆன்-லைன் கேமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு தங்களின் பரிந்துரைகளை ஜிஎஸ்டி குழுவிடம் தாக்கல் செய்துள்ளது.
ஜூலை-செப்டம்பரில் வேலையின்மை வீதம் 7.2 சதவீதமாகக் குறைந்தது: என்எஸ்ஓ அறிக்கை
லாக்டவுன் காலத்தில்தான் ஆன்-லைன் கேம் சந்தை மதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த 2021ம் ஆண்டுவரை ஆன்லைன் கேம் மதிப்பு ரூ.13,600 கோடியாக இருந்தது, இது 2024-25ம் ஆண்டில் ரூ.29ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆன்லைன் கேமில் ஈடுபட்டு ஏராளமானோர் நஷ்டமாகி தற்கொலை செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது