இந்தியாவில் உணவு டெலிவரி சேவை டிசம்பர் 29ம் தேதி முதல் நிறுத்தப்போவதாக அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் உணவு டெலிவரி சேவை டிசம்பர் 29ம் தேதி முதல் நிறுத்தப்போவதாக அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரெஸ்டாரன்ட் பார்ட்னர்களுக்கு, அமேசான் நிறுவனம் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும்படி கடிதம் அனுப்பியதன் மூலம் இந்தத் தகவல் கசிந்துள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் எல்லாவற்றிலும் ஆஃபர் மழை!
ஏற்கெனவ் இந்தியாவில் வழங்கப்பட்டுவரும் ஆன்-லைன் வழிக் கல்விச் சேவையை 2023ம் ஆண்டுமுதல் நிறுத்தப்போவதாகஅமேசான் நிறுவனம் அறிவித்திருந்தது. இப்போது, உணவு டெலிவரி சேவையும் நிறுத்துகிறது.
அமேசான் நிறுவனம் தன்னுடைய ரெஸ்டாரன்ஸ் பார்ட்னர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் “ கவனமாக நாங்கள் மதிப்பீடு செய்ததில் 2022, டிசம்பர் 29ம் தேதி முதல் எங்களின் உணவுடெலிவரி சேவையையும் நிறுத்த முடிவு செய்திருக்கிறோம்.
இந்த முடிவின் மூலம் இனிமேல் நீங்கள் அமேசான் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து நீண்டகாலத்துக்கு ஆர்டர்களைப் பெற முடியாது.நாங்கள் சேவையை முடிவுக்கு கொண்டுவரும்வரை ஆர்டர்களைப் பெறலாம். அந்த ஆர்டர்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளது.
தற்போது அமேசான் புட் கிளை, ஏறக்குறைய 3ஆயிரம் ரெஸ்டாரன்ட்களுடன் தொடர்பு வைத்து உணவுடெலிவரி செய்து வருகிறது. குறிப்பாக மெக்டோனல்ட், டோமினோஸ் பீட்சா ஆகியவை அடங்கும்.
2020ம் ஆண்டு மே மாதம் ஆன்-லைன் உணவு டெலிவரி சேவையில் அமேசான் நிறுவனம் இறங்கியது.
புதிய வகையான ஸ்டேட்டஸ் உட்பட 3 அப்டேட்கள் வருகிறது!
அந்தநேரத்தில் நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு இருந்தது. அமேசான் உணவு டெலிவரி சேவை முதலில் பெங்களூரு நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு, அதன்பின்2021ம் ஆண்டில் இந்த சேவை நீட்டிக்கப்பட்டது.
அமேசான் நிறுவனம் உணவு டெலிவரி சேவையில் களமிறங்கியபின் உள்ளூர் நிறுவனங்களான ஸ்விக்கி, ஜோமேட்டாவுக்கு கடும் போட்டியளித்தது. அமேசான் களமிறங்கி சில மாதங்களில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெஸ்டாரண்ட்களை தொடர்பு கொண்டு சேவையைத் தொடங்கியது.
பர்கர் கிங், பெஹ்ரோஸ் பிரியாணி, பாசோஸ், சாய்பாயின்ட், பிரஷ்மெனு, அடிகா உள்ளிட்ட பல்வேறு ரெஸ்டாரண்ட்களுடன் தொடர்பு வைத்து சேவையில் ஈடுபட்டது. முதலில் நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் ஆர்டர் எடுத்து சேவை செய்த அமேசான் அதன்பின் சேவையை விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.