Share Market Today: 2வது நாளாக உச்சம் தொட்ட பங்குச்சந்தை ! சென்செக்ஸ், நிப்டி உயர்வு: ரியல்எஸ்டேட் பங்கு லாபம்

By Pothy RajFirst Published Nov 25, 2022, 4:05 PM IST
Highlights

வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று, மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் ஏற்றத்துடன் முடிந்தன. தொடர்ந்து 4வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது.

வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று, மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் ஏற்றத்துடன் முடிந்தன. தொடர்ந்து 4வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது.

அமெரி்க்கப் பங்குச்சந்தை நேற்று தேங்க்ஸ்கிவிங் நாள் என்பதால் விடுமுறை விடப்ட்டது. ஆனால், நேற்றுமுன்தினம் பெடரல்ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்துவதில் தீவரம்காட்டாது என்ற அறிவிப்பால் அமெரிக்கச்சந்தை உயர்வுடன் முடிந்தது. 

பங்குச்சந்தையில் மந்தமான போக்கு ! சென்செக்ஸ், நிப்டி சுணக்கம்: PSU வங்கி பங்கு லாபம்!

அதன் எதிரொலி இந்தியச் சந்தையிலும், ஆசியச் சந்தையிலும் காணப்பட்டது. ஆனால், இன்று அமெரிக்கப் பங்குச்சந்தை எவ்வாறு இருக்கும் என்பது முதலீட்டாளர்களுக்கு தெரியவில்லை.

இதனால் முதலீட்டாளர்கள் எந்த பங்குகளிலும் முதலீடு செய்வதில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பதால், காலை முதலே மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் சுணக்கமாகவும், மந்தமாகவும் காணப்பட்டது.

இருப்பினும் பிற்பகலுக்கு மேல் பங்குச்சந்தையில் உயர்வு காணப்பட்டது. இதனால் வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சமாக 62,447 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் சரிந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் 62,245 புள்ளிகள்தான் அதிகபட்சம் அதைவிட இன்று வர்த்தகப்புள்ளிகள் அதிகரி்த்தது.

வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை! 62ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்! நிப்டி உச்சம்

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 20 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சமாக 62,293 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 28 புள்ளிகள் உயர்ந்து, 18,512 புள்ளிகளில் முடிந்தது.

இந்தவாரத்தில் மட்டும் நிப்டி, சென்செக்ஸ் 0.9 முதல் 0.95 சதவீதம் உயர்ந்துள்ளன. குறிப்பாக பிஎஸ்இ-யில் தகவல்தொழில்நுட்பம், வங்கிப் பங்குகளும், நிப்டியில் வங்கித்துறையும், முதலீடுப் பொருடு்களும், எப்எம்சிஜியும் அதிகலாபம் அடைந்தன.  

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 14நிறுவனப் பங்குகள் லாபத்தையும், மற்றவை இழப்பையும் சந்தித்தன. ரிலையன்ஸ், விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, என்டிபிசி, ஐடிசி, டிசிஎஸ், பவர்கிரிட், டெக்மகிந்திரா, டாடா ஸ்டீல், மகிந்திரா அன்ட் மகந்திரா ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன.

நிப்டியில் ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் ஒருசதவீதம் உயர்ந்தன, ஆட்டோமொபைல், உலோகம், மருந்துத்துறை பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்தன.


 

click me!