Rishi Sunak:பிரிட்டனின் ஆசியக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரதமர் ரிஷி சுனக், அவரின் மனைவிக்கு முதல்முறையாக இடம்

By Pothy RajFirst Published Nov 25, 2022, 11:49 AM IST
Highlights

பிரிட்டனில் 2022ம் ஆண்டுக்கான ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், அவரின் மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இடம் பெற்றனர். முதலிடத்தில் இந்துஜா குடும்பத்தினர் தொடர்ந்து 8ஆண்டாக உள்ளனர்.

பிரிட்டனில் 2022ம் ஆண்டுக்கான ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், அவரின் மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இடம் பெற்றனர். முதலிடத்தில் இந்துஜா குடும்பத்தினர் தொடர்ந்து 8ஆண்டாக உள்ளனர்.

அக்ஷதா மூர்த்தியின் தந்தையான இன்போசிஸ் நிறுவனத்தின் இணைநிறுவனரான என்.ஆர் நாராயண மூர்த்தி, 7.90 கோடி பவுண்ட் ஸ்டெர்லிங்குடன் 17-வது இடத்தில் உள்ளார். 

ஐடி ஊழியர்கள் தொடர்ந்து பணியை இழக்கும் அபாயம்; இந்தியாவிலும் காத்திருக்கும் ஆபத்து பொருளாதார மந்தநிலை ஏற்படுமா

ஆசிய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 135 கோடி பவுண்ட்கள் அதிகரித்து, 1,113.20 கோடி பவுண்ட்களாக உயர்ந்துள்ளது.

முதலிடத்தில் இருக்கும் இந்துஜா குடும்பத்தினர் தொடர்ந்து 8வது இடத்தில் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர். இந்துஜா குடும்பத்தினர் சொத்து மதிப்பு 3000 கோடி பவுண்ட்களாகும். கடந்த ஆண்டைவிட 300 கோடி பவுண்ட்கள் அதிகரித்துள்ளது.

லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பார்க் பிளாசாவில் 24-வது ஆண்டு ஆசிய பிஸ்னஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்துத. இதில் லண்டன் மேயர் சாதிக் கான் , “2022, ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல்” குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 

ஃபோர்டு மோட்டார் நிறுவனம் உலகளவில் 6,34,000 எஸ்யுவி வாகனங்களை திரும்ப பெறுகிறது; காரணம் இதுதான்!!

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் எம்.பி. ஆலிவர் டோவ்டன் கூறுகையில் “ ஒவ்வொரு ஆண்டும் பிரி்ட்டனைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி அடைந்து வருவது எனக்கு வியப்பு ஏதும் இல்லை. பிரி்ட்டனில் வாழும் ஆசியாவைச் சேர்ந்த மக்களின் கடின உழைப்பு, தீர்மானம், முடிவு, தொழில்முனைவோர் திறனை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். எங்களின் முதலாளியாக, ஆசியாவைச் சேர்ந்தவரான ரிஷி சுனக் பிரதமராக வந்துள்ளார்” எனத் தெரிவித்தார்

2022, ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்த முறை 16 பேர் இடம் பெற்றுள்ளனர், கடந்தஆண்டைவிட இந்த ஆண்டு ஒருவர் கூடுதலாக இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டைவிட பெரும்பாலானோர் சொத்து மதிப்பு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

பாஸ்போர்டில் ஒற்றைப் பெயர்தான் இருப்பவர்கள் கவனத்திற்கு ! UAE செல்லத் தடை!

ஸ்ரீ பிரகாஷ் லோகியா குடும்பத்தினர் சொத்து மதிப்புதான் அதிகபட்சமாக 400 கோடி பவுண்ட்கள் அதிகரி்த்து, 880 கோடி பவுண்டகளாக உயர்ந்துள்ளது. லட்சுமி மிட்டல் அவரின் மகன் ஆதித்யா 1280 கோடி பவுண்டக்ள், பிரகாஷ் லோகியா 880 கோடி பவுண்ட்கள், நிர்மல் சேத்தியா 650 கோடி பவுண்ட் சொத்துக்களுடன் உள்ளனர்.

click me!