Gold Rate Today: ஏற்றத்தில் தங்கம் விலை! 2 நாட்களில் 310ரூபாய் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy Raj  |  First Published Nov 25, 2022, 10:26 AM IST

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.300க்கு மேல் உயர்ந்துள்ளது.


தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.300க்கு மேல் உயர்ந்துள்ளது.

 தங்கம் விலை இன்று கிராமுக்கு 4 ரூபாயும், சவரனுக்கு 32 ரூபாயும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,931ஆகவும், சவரன், ரூ.39,448 ஆகவும் இருந்தது.

Tap to resize

Latest Videos

தங்கம் விலை விர்ர்..! ஒரேநாளில் சவரனுக்கு ரூ.280 உயர்வு: காரணம், நிலவரம் என்ன?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ரூ.4,935 ஆகவும், சவரனுக்கு 32 ரூபாய் ஏற்றம் கண்டு, ரூ.39 ஆயிரத்து 480ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,935க்கு விற்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை  பெரிதாக உயர்த்தாது என்ற தகவல் சர்வதேச அளவில் சாதகமான போக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. 

இதனால் கடந்த சில நாட்களாக டாலரின் குறியீடு குறைந்து, இந்திய ரூபாய் மதிப்பும் வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் மதிப்பும் கடந்த இருநாட்களாக உயர்ந்துள்ளது. இரு நாட்களில் சவரனுக்கு ரூ.310 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சி! மிஸ் பண்ணாதிங்க, வாங்கிருங்க! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இப்போது மீண்டும் உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பத்தினருக்கும்,ந கைவாங்கு வோருக்கும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.760வரை குறைந்த நிலையில் இரு நாட்களில் சவரனுக்கு ரூ.312 அதிகரித்துள்ளது. 

தங்கம் வாங்க பொன்னான நேரம்! குறையும் விலை, மறந்துடாதிங்க! இன்றைய நிலவரம் என்ன?

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.68.20 ஆக இருந்தநிலையில்,  இன்று காலை கிராமுக்கு 20 காசு சரிந்து, ரூ.68.00 ஆக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.68,200 ஆக இருந்தநிலையில், 200 ரூபாய் சரிந்து, ரூ.68,000 ஆக குறைந்துள்ளது.

click me!