Share Market Today: வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை! 62ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்! நிப்டி உச்சம்

By Pothy RajFirst Published Nov 24, 2022, 3:56 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று வரலாற்று உச்சத்தை எட்டி முடிந்தது. சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வரலாறு படைத்தது, நிப்டி 52 வாரங்களில் இல்லாத உயர்வை எட்டியது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று வரலாற்று உச்சத்தை எட்டி முடிந்தது. சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வரலாறு படைத்தது, நிப்டி 52 வாரங்களில் இல்லாத உயர்வை எட்டியது.

உச்சத்துக்கு காரணம்

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்தபோதிலும், பெடரல் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதத்தை குறைவாகவே உயர்த்தப் போகிறது என்ற தகவல் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன்பே வந்தது. இந்த தகவலால் உற்சாகமடைந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக டாலர் குறியீடு சரிந்து, ரூபாய் மதிப்பு அதிகரித்தது.

உற்சாகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி உயர்வு: டாடா பங்குகள் லாபம்!காரணம் என்ன?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும் இந்தியப் பொருளாதாரத்துக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிலும் இந்தியப் பொருளாதாரத்தில் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதையே காட்டுகிறது.

இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் காலை முதலே வர்த்தகத்தில் ஈடுபட்டனர். சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் ஏறுமுகத்தில் இருந்தன. பிற்பகலுக்குப்பின் வர்த்தக்தில் சூடுபிடித்தது.

3 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் உயர்வு: சென்செக்ஸ் ஏற்றம்: பேடிஎம் அடி! PSB ஜோர்

இதுவரையில்லாத வகையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 62ஆயிரம் புள்ளிகளை எட்டியும், கடந்தும் வரலாறு படைத்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியும் 18,400 புள்ளிகளைக் கடந்து சென்று புதிய மைல்கல்லை எட்டியது.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 762 புள்ளிகள் ஏற்றம் பெற்று  62,2273 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 217 புள்ளிகள் அதிகரித்து, 18,484 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டியும், சென்செக்ஸ் ஆகியவை ஏறக்குறைய ஒரு சதவீதம் வளர்ச்சி பெற்றன.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் 2 பங்குகளைத் தவிர 28 நிறுவனப் பங்குகளும் லாபமீட்டின. கோடக் வங்கி, பஜாஜ்பின்சர்வ் நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன.
பிஎஸ்இயில், தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் 1.92% லாபமீட்டன, அதைத் தொடர்ந்து, நுகர்வோர் பொருட்கள் துறை 0.50%, மருத்துவம் 0.44%, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் 1.10% வளர்ச்சி அடைந்தன.

ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை! முதலீட்டாளர்கள் குழப்பம்: சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றம்

நிப்டியில் தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் 2.23% லாபமீட்டின.அதைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகள் 0.75%, வங்கிகள் 0.65%, எரிசக்தி 0.50%, எப்எம்சிஜி 0.45%, கட்டுமானம் 0.68%  ஆகியவை வளர்ச்சி அடைந்தன. உலோகத்துறை, மருந்துத்துறை சரிவில் முடிந்தன.

click me!