Share Market Today: உற்சாகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி உயர்வு: டாடா பங்குகள் லாபம்!காரணம் என்ன?

By Pothy RajFirst Published Nov 24, 2022, 10:05 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்வுடன் வர்தத்கத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வுடன் நகர்ந்து வருகின்றன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்வுடன் வர்தத்கத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வுடன் நகர்ந்து வருகின்றன.

என்ன காரணம்

சர்வதேச சூழல் சாதகமாக இருக்கும்போது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை குறைவாகவே உயர்த்தப் போகிறது என்றதகவல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் டாலர் குறியீடு சரிந்து, ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும் இந்தியப் பொருளாதாரத்துக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்த  போதிலும் ஆசியச் சந்தையில் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிலும் இந்தியப் பொருளாதாரத்தில் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதையே காட்டுகிறது.

இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் காலை முதலே வர்த்தகத்தில் ஈடுபடுவதால் சந்தையில் உற்சாகமாக வர்த்தகம் நடக்கிறது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் ஏறுமுகத்தில் உள்ளன.

3 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் உயர்வு: சென்செக்ஸ் ஏற்றம்: பேடிஎம் அடி! PSB ஜோர்

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 154  புள்ளிகள் உயர்ந்து, 61,665 புள்ளிகளில் வர்த்தகத்தை ஏற்றத்துடன் நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 40 புள்ளிகள் அதிகரித்து, 18,307 புள்ளிகளில் செல்கிறது. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 நிறுவனப் பங்குகளில், 5 நிறுவனப் பங்குகள் மட்டுமே இழப்பில் உள்ளன, மற்ற நிறுவனப் பங்குகள் அனைத்தும் லாபத்தில் செல்கின்றன. ஐடிசி, சன்பார்மா, என்டிபிசி, பார்தி ஏர்டெல், கோடக்வங்கி பங்குகள் சரிவில் உள்ளன. டாடா நுகர்வோர் பொருட்கள், யுபிஎல், ஹெச்டிஎப்சி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பிபிசிஎல் ஆகிய பங்குகள் நிப்டியில் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. ஓன்ஜிசி, அதானி என்டர்பிரைசஸ், ஜேஎஸ்டபிள்யு, எஸ்பிஐ காப்பீடு, பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் விலை குறைந்துள்ளன.

ஏற்றத்துடன் பங்குச்சந்தை தொடக்கம்! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு

நிப்டியில், உலோகத்துறை பங்குகள் மட்டும் சரிந்துள்ளன. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிப் பங்குகள் 1.36%, ஐடி 0.64%, ஊடகம், எப்எம்சிஜி, நிதிச்சேவைப் பங்குகள் லாபத்தில் உள்ளன.

ஏற்றத்தை தக்கவைத்த பங்குச்சந்தை: ஊசலாட்டத்திலும் சென்செக்ஸ் உயர்வு: வங்கி,உலோக பங்கு லாபம்

அமெரிக்க பங்குச்சந்தை நேற்று உயர்வுடன் வர்த்தக்தை முடித்தன. அதைத் தொடர்ந்து, ஆசியப் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. தேங்ஸ்கிவிங் டே என்பதால், அமெரிக்க பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
 

click me!