Share Market Today: ஏற்றத்தை தக்கவைத்த பங்குச்சந்தை: ஊசலாட்டத்திலும் சென்செக்ஸ் உயர்வு: வங்கி,உலோக பங்கு லாபம்

By Pothy RajFirst Published Nov 23, 2022, 3:59 PM IST
Highlights

மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக ஏற்றத்தோடு இன்று வர்த்தகத்தை முடித்தன. ஊசலாட்டத்தோடு வர்த்தகம் சென்றபோதிலும் முடிவில்  உயர்வில் முடிந்தது.

மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக ஏற்றத்தோடு இன்று வர்த்தகத்தை முடித்தன. ஊசலாட்டத்தோடு வர்த்தகம் சென்றபோதிலும் முடிவில்  உயர்வில் முடிந்தது.

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் குறைக்கும் வகையில், பெடரல் ரிசர்வ் வங்கி இந்த வாரத்தில் நடக்கும் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில்  வட்டிவீதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்ப்புக்கு மத்தியிலும் பங்குச்சந்தை உயர்வில் முடிந்துள்ளது.

3 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் உயர்வு: சென்செக்ஸ் ஏற்றம்: பேடிஎம் அடி! PSB ஜோர்

அமெரிக்க பங்குச்சந்தை நேற்று உயர்வில் முடிந்ததன் விளைவு, ஆசியப் பங்குச்சந்தையும் ஏற்றத்தோடு முடிந்தன. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்தபோதிலும் ஆசியச் சந்தைகள் லாபத்துடன் நகர்ந்தன.

கச்சா எண்ணெய் இருப்பு அமெரிக்காவிடம் குறைந்துவருவதால், கச்சா எண்ணை தேவை அதிகரிக்கும், அதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள்.
இந்த உற்சாகம் இந்தியச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்முன்பே காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியதும் 200 புள்ளிகள் உயர்வுடன் மும்பை சந்தையில் சென்செக்ஸ் நகர்ந்தது.

வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் ஊசலாட்டத்துடன் இருந்தாலும் மாலை வர்த்தகம் முடிவில் உயர்வில் முடிந்தது.

ஏற்றத்துடன் பங்குச்சந்தை தொடக்கம்! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு

வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 91 புள்ளிகள் அதிகரித்து, 61,510 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 23 புள்ளிகள் உயர்ந்து, 18,267 புள்ளிகளில் முடிந்தது. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 13 நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன. 17 பங்குகள் மதிப்பு சரிந்தது. பஜாஜ்பைனான்ஸ், டாக்டர்ஸ்ரெட்டி, மாருதி, கோடக் வங்கி, சன்பார்மா, என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா வங்கிப்பங்குகள் லாபத்தில் முடிந்தன.

ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை! முதலீட்டாளர்கள் குழப்பம்: சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றம்

நிப்டியில் பொதுத்துறை வங்கிப் பங்குகள் 1.36% லாபமீட்டின. அதைத் தொடர்ந்து வங்கிப் பங்குகள் 0.88% ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு 0.84%, உலோகப்பங்குகள் 0.76%, வங்கித்துறை 0.88%, ஆட்டோமொபைல் பங்கு 0.38% வளர்ச்சி அடைந்தன.

click me!