தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 750 ரூபாய் வரை சரிந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 750 ரூபாய் வரை சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,905ஆகவும், சவரன், ரூ.39,240 ஆகவும் இருந்தது.
தங்கம் வாங்க பொன்னான நேரம்! குறையும் விலை, மறந்துடாதிங்க! இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து ரூ.4,885 ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ரூ.39 ஆயிரத்து 080 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,885க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சூழல் ஏற்பட்டுள்ள பதற்றம், சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு, அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்புக்காக காத்திருப்பு போன்றவற்றால் தங்கம் விலை நிலையில்லாமல் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவனம் கச்சா எண்ணெய் முதலீட்டின் மீது திரும்புவதாலும் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைகிறது.
தங்கம் விலை தொடர் வீழ்ச்சி ! நடுத்தரக் குடும்பத்தினர் ரிலாக்ஸ்! இன்றைய நிலவரம் என்ன?
இதன் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.38ஆயிரத்துக்குள் கீழ் செல்லும் நிலைக்கு வந்துவிட்டது.
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது, சிறுசிறுக நகை வாங்கி சேர்த்து வைக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும், ஏழை மக்களுக்கும் ஆறுதலை அளித்துள்ளது. இந்த விலை குறைவைப் பயன்படுத்தி, தங்கத்தை வாங்குவதை வேகப்படுத்தலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760வரை குறைந்துள்ளது.
தங்கம் விலை ஊசலாட்டம்! சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது! நிலவரம் என்ன?
வெள்ளி விலை இன்று மாற்றம் ஏதும் இல்லை. வெள்ளி கிராம் ரூ.67.00ஆகவும், கிலோ ரூ.67,000 ஆக நீடிக்கிறது