Stock Market Today: 3 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் உயர்வு: சென்செக்ஸ் ஏற்றம்: பேடிஎம் அடி! PSB ஜோர்

By Pothy RajFirst Published Nov 22, 2022, 4:06 PM IST
Highlights

மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் 3 நாட்களுக்குப்பின் இன்று உயர்வுடன் முடிந்தன். சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை முடித்தது.

மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் 3 நாட்களுக்குப்பின் இன்று உயர்வுடன் முடிந்தன். சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை முடித்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் அது இந்தியாவுக்கு சாதகமானதாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் எண்ணினர். அது மட்டுல்லாமல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால், வெளிப்புறக் காரணிகள் பங்குச்சந்தையை பெரிதாக பாதிக்கவில்லை.

பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி, நிப்டிக்கு அடி!

ஆசியப் பங்குச்சந்தையில் டோக்கியோ, ஷாங்காய் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன. ஆனால், ஹாங்காங், சியோல் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதுபோல் ஏற்றம், இறக்கம் நிறைந்ததாகஇருந்தாலும், இந்தியச் சந்தைகள் உயர்வுடனே பயணித்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே வர்த்தக நிலவரம் ஊசலாட்டத்துடனே இருந்தது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்ற, இறக்கத்துடனே இருந்தன. ஆனால், ஒரு கட்டத்துக்கு பின், வர்த்தகம் சாதகமான பாதையில் பயணிக்கத் தொடங்கியதால், வர்த்தகம் ஏற்றத்தில் பயணிக்கத் தொடங்கியது.
மாலையில் வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்ந்து, 61,419 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 89 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 18,249 புள்ளிகளில் நிலைபெற்றது.

கரடியிடம் சிக்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி: PSU வங்கி தப்பித்தது

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய பங்குகளில், 4 நிறுவனப் பங்குகளைத் தவிர மற்ற 26 பங்குகளும் லாபத்தில் முடிந்தன. கோடக்வங்கி, பார்தி ஏர்டெல், பவர்கிரிட், நெஸ்ட்லேஇந்தியா ஆகிய பங்குகள் சரிந்தன.

நிப்டியைப் பொறுத்தவரை பொதுத்துறை வங்கிப் பங்குகள் 1.5 சதவீதம் உயர்ந்தன. யுசிஓ வங்கி பங்கு மதிப்பு 12 சதவீதம் அதிகரித்தது. ஜேஎஸ்டபிள்யு, ஹெச்டிஎப்சி, எல்ஐசி பங்கு மதிப்பு உயர்ந்தது. இன்டஸ்இன்ட் வங்கி மதிப்பு 3%சரிந்தது.

ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை! முதலீட்டாளர்கள் குழப்பம்: சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றம்

பேடிஎம் பங்கு மதிப்பு 2 வாரங்களில் 26 சதவீதம் குறைந்துள்ளது.  அதிலும் இன்றைய வர்த்தகத்தின்போது பேடிஎம் பங்குமதிப்பு 10சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. முடிவில், ஒரு பங்கு மதிப்பு ரூ.483.30 ஆக இருக்கிறது.

பேடிஎம் பங்கு ஐபிஓ வெளியிடும்போது ஒரு பங்கு ரூ.2,150க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 78 சதவீதம் குறைவாக, ரூ.483க்கு விற்கப்படுகிறது

click me!