Elon Musk: Twitter-ரை தொட்ட கெட்ட!எலான் மஸ்க்கிற்கு தினசரி ரூ.2,500 கோடி இழப்பு! 10,000 கோடி டாலர் நஷ்டம்

Published : Nov 22, 2022, 02:46 PM IST
Elon Musk: Twitter-ரை தொட்ட கெட்ட!எலான் மஸ்க்கிற்கு தினசரி ரூ.2,500 கோடி இழப்பு! 10,000 கோடி டாலர் நஷ்டம்

சுருக்கம்

ட்விட்டர், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 2022ம்ஆண்டில் மட்டும் 10ஆயிரம் கோடி டாலர் அளவு குறைந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்திகள் தெரிவிக்கின்றன

ட்விட்டர், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 2022ம்ஆண்டில் மட்டும் 10ஆயிரம் கோடி டாலர் அளவு குறைந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்திகள் தெரிவிக்கின்றன

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டில் இந்ததகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு 10ஆயிரம் கோடி டாலர் குறைகிறது.

Twitter அலுவலகங்கள் தற்காலிகமாக மூடல்! பணியாளர்கள் ராஜினாமா எதிரொலி!!

51வயதாகும் எலான் மஸ்கிற்கு கடந்த ஆண்டு நவம்பரில் சொத்து மதிப்பு 34ஆயிரம் கோடி டாலராகும். ஆனால், இந்த ஆண்டுநவம்பரில் 17000 கோடி டாலராகக் குறைந்துள்ள. கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவு எலான் மஸ்க் சொத்து மதிப்பு குறைந்துவிட்டது.

டெஸ்லாவில் 15 சதவீதப் பங்குகளை வைத்துள்ள எலான் மஸ்க், நேற்று டெஸ்லா பங்குகள் விலை கடுமையாகக் குறைந்ததையடுத்து, 860 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் டெஸ்லா பங்குகள் மதிப்பு 58 சதவீதம் குறைந்துள்ளது.

இருப்பினும் உலகளவில் இன்றும் எலான் மஸ்க்தான் முதல் கோடீஸ்வரராக இருந்து வருகிறார். லூயிஸ்விட்டன் நிறுவனத்தின் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் 2வது இடத்திலும் உள்ளனர். அமேசான் நிறுவனர் ஜெப் பிஜேஸ் சொத்து மதிப்பு 5400 கோடிடாலராகவும், பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 5700 கோடி டாலராக உள்ளது.

Twitter-ல் இருந்து மொத்தமாக ராஜினாமா செய்யும் பணியாளர்கள்! Elon Musk பதில்..

எலான் மஸ்க் சொத்து மதிப்பு 2022ம் ஆண்டில் மட்டும் 37 சதவீதம் அல்லது 10100 கோடி டாலர் குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் தினசரி 2500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நவம்பர் 22ம் தேதி நிலவரப்படி எலான் மஸ்க் சொத்து மதிப்பு 17000 கோடி டாலராகும். 

டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் டெயில் லைட் பிரச்சினையால் 3.21 லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன, எக்ஸ் மாடல் காரிலும் ஏர்பேக்சிக்கலால் 30ஆயிரம் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இந்த காரணத்தால் டெஸ்லா பங்கு மதிப்பு கடுமையாகச் சரிந்து.

மீண்டும் ப்ளூ டிக்.. எலான் மஸ்க்கின் அடுத்த கட்ட நடவடிக்கை! டுவிட்டர் நிலைமை?

டெஸ்லா நிறுவனத்தில் 15 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வைத்துள்ளார்.  ஆனால் ட்வி்ட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக 4400 கோடி டாலரை செலவிட்டார். ட்விட்டரை வாங்குவதற்கு பங்குகளைவிற்றது, அதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் சரிவு, ட்விட்டரில் பிரச்சினைகள் என எலான் மஸ்கிற்கு சிக்கல் நீண்டு கொண்டே வருகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!