Gold Rate Today: தங்கம் வாங்க பொன்னான நேரம்! குறையும் விலை, மறந்துடாதிங்க! இன்றைய நிலவரம் என்ன?

By Pothy Raj  |  First Published Nov 22, 2022, 10:28 AM IST

சர்வதேச சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் வரை சரிந்துள்ளது.


சர்வதேச சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் வரை சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 1240 ரூபாயும் வீழ்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,920ஆகவும், சவரன், ரூ.39,360 ஆகவும் இருந்தது.

Tap to resize

Latest Videos

தங்கம் விலை தொடர் வீழ்ச்சி ! நடுத்தரக் குடும்பத்தினர் ரிலாக்ஸ்! இன்றைய நிலவரம் என்ன?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்கிழமை) கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூ.4,905 ஆகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ரூ.39 ஆயிரத்து 240 ஆகவும் சரிந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,905க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், குறிப்பாக அமெரிக்க பெடரல் ரிசர் வட்டிவீதத்தை உயர்த்தலாம் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை தவிர்த்து வருகிறார்கள். 

மேலும் சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலால் பலநகரங்களில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சீனப் பொருளாதாரம் மீண்டும் சுணக்கமடைந்துள்ளது. உலகளவில் தங்கம் நுகரும் நாடுகளில் முன்னணியான சீனாவில் பொருளாதாரம் சுணக்கமடைந்ததால்,தங்கத்தின் தேவையும் குறைந்துள்ளது.

தங்கம் விலை ஊசலாட்டம்! சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது! நிலவரம் என்ன?

இதன் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் இன்னும் தங்கம் விலை சவரன் ரூ.39ஆயிரத்துக்கு கீழ் சரியவில்லை. 

சவரன் ரூ.40ஆயிரத்தை நோக்கி சென்ற நிலையில் தற்போது குறைந்து வருவது நடுத்தரக் குடும்பத்தினருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. நகை வாங்குவோரும் தங்கம் இறங்குமுகத்தில் இந்த நேரத்தைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.600வரை குறைந்துள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்புக்குப்பின் தங்கம் விலையில் மாறுபாடு ஏற்படலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! 2 நாளில் 200 ரூபாய் குறைந்தது! நிலவரம் என்ன?

வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.66.50 ஆக இருந்தநிலையில் 50 பைசா அதிகரித்து, ரூ.67.00ஆகவும், கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து, ரூ.67,000 ஆக உயர்ந்துள்ளது.

click me!