Stock Market Today: ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை! முதலீட்டாளர்கள் குழப்பம்: சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றம்

By Pothy RajFirst Published Nov 22, 2022, 9:59 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தை தடுமாற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகின்றன. 

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தை தடுமாற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகின்றன. 

சர்வதேச சூழல், அமெரிக்க பெடரல் ரிசர்வ், சீனாவில் அதிகரிக்கும் கொரோனா போன்ற காரணிகளால் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தை அனுகிறார்கள்.

கரடியிடம் சிக்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி: PSU வங்கி தப்பித்தது

பங்குச்சந்தையில் தொடர்ந்து 3 நாட்களாக சரிவு காணப்படுகிறது. இன்று காலையும் வர்த்தகம் தொடங்கும்போது சரிவுடன் தொடங்கியது. ஆனால், சிறிது நேரத்தில் சரிவிலிருந்து மீண்டு உயர்ந்தது. பின்னர், சரிந்து ஏற்ற, இறக்கத்துடனே வர்த்தகம் செல்கிறது.

அமெரி்க்காவில் நிலவும் பணவீக்கத்தைக் குறைக்க பெடரல் ரிசர்வ், இந்தவாரத்தில் கூடும் கூட்டத்தில் வட்டிவீதத்தை உயர்த்துவது உறுதியாகியுள்ளது.  இதனால், பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவதும் அதிகரித்து வருகிறது.

பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி, நிப்டிக்கு அடி!

சீனாவில் கொரோனா தாக்கம் காரணாக, லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. இதனால் சீனாவின் பொருளாதாரம் மேலும்பின்தங்கும் சூழல் நிலவுகிறது. சீனாவில் நிலவும் கட்டுப்பாடு காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது, உலோகங்கள் விலையும் குறைகிறது. இந்த பாதிப்பு இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கிறது.

நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகதரம் வாய்ந்த வங்கி, தொலைத்தொடர்பு, முதலீட்டுப் பொருட்கள், ஐடி, ஆட்டோமொபைல் மற்றும் ப்ளூசிப் பங்குகளை வாங்க முயல்கிறார்கள். 

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 65 புள்ளிகள் உயர்ந்து, 61,210 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 17 புள்ளிகள் அதிகரித்து 18,177 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது. பங்குச்சந்தையில் வர்த்தகம் ஒருவிதமான ஊசலாட்டத்துடனே நடந்து வருகிறது

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் 16 நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்துள்ளன, 14 நிறுவனப் பங்குகள் விலை குறைந்துள்ளன. குறிப்பாக, லார்சன் அன்ட் டர்போ, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, மாருதி, இன்போசிஸ், டாக்டரெட்டீஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ்பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் விலை ஏற்றத்தில் உள்ளன.

ஜிஎஸ்டி சட்டத்தில் ஐபிசியின் கீழ் வரும் தண்டனைக் குற்றப்பிரிவை நீக்க மத்திய அரசு ஆலோசனை

நிப்டியில் உலோகம், ரியல்எஸ்டேட், தகவல் தொழில்நுட்பப் பங்குகள் 0.5 சதவீதம் வரை சரிந்துள்ளன. பொதுத்துறை வங்கிப் பங்குகள், ஆட்டோமொபைல் பங்கு விலை 0.9 சதவீதம் உயர்ந்துள்ளன.

பேடிஎம் பங்கு விலை இன்று காலை வர்த்தகத்தில் 6 சதவீதம் வரை சரிந்துள்ளன. அதானி நிறுவனம் என்டிடிவி பங்குகளை ஓபன்ஆபரில் விற்பனை செய்கிறது, இதனால் என்டிடிவி பங்கு விலையும் 3 சதவீதம் குறைந்துள்ளது.


 

click me!