Stock Market Today: கரடியிடம் சிக்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி: PSU வங்கி தப்பித்தது

By Pothy RajFirst Published Nov 21, 2022, 3:58 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. தொடர்ந்து 3வது நாளாக வர்த்தகம் சரிவில் முடிந்துள்ளது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. தொடர்ந்து 3வது நாளாக வர்த்தகம் சரிவில் முடிந்துள்ளது.

அமெரிக்காவில் பணவீக்கம் சற்று குறைந்திருப்பதால் வட்டிவீதம் உயர்த்தவது குறைக்கப்படும் என்ற தகவல் வெளியானாலும் அது உறுதியாக இல்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் இன்னும் 75 முதல் 100 புள்ளிகள் வரை உயர்த்தும்  வாய்ப்புள்ளதாகஅட்லாண்டா பெடரல் வங்கி ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளார். 

பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி, நிப்டிக்கு அடி!

இந்தவாரத்தில் பெடரல்ரிசர்வ் கூட்டம் நடக்க இருப்பதால், அதன் அறிவிப்பை எதிர்பார்த்தே முதலீட்டாளர்கல் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு செய்யாமல் தாமதம் செய்து வருகிறார்கள். 

2வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி சரிவு: PSU பங்குகள் லாபம்

சீனாவில் அதிகரி்த்துவரும் கொரோனா பரவல், மீண்டும் லாக்டவுன் நடவடிக்கை போன்றவை உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் நுகர்வில் மிகப்பெரிய நாடான சீனாவில் கொரோனா தாக்கம் குறையாததால், கச்சா எண்ணெய் விலை பேரல் 87 டாலராகக் குறைந்தது. 

சீனாவில் உள்ள நிலையால் ஐரோப்பிய பங்குச்சந்தையிலும் சரிவு காணப்படுகிறது. இந்தக் காரணங்ககளால் இந்தியப் பங்குச்சந்தையும் காலை முதலே சரிவில் சென்றன. பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை அதிகப்படுத்தலாம் என்ற அச்சத்தால், அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீட்டை எடுப்பதும் அதிகரித்து வருகிறது, உள்நாட்டு முதலீட்டாளர்கள்தான் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்.

சர்வதேச சூழல் காரணமாக இன்று காலை மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி நேரம் செல்லச்செல்ல சரிவு விரவடைந்து 500 புள்ளிகளுக்கு மேல் சென்றது. இந்த சரிவிலிருந்து கடைசிவரை இந்தியப் பங்குச்சந்தை மீளவில்லை.

வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 518 புள்ளிகள் குறைந்து, 61,144 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 147 புள்ளிகள் சரிந்து, 18,159 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.

கடும் ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி சரிவு: பொதுத்துறை பங்குகள் ஜோர்

மும்பை பங்குச்சந்தையில்உள்ள 30 முக்கியப் பங்குகளில் 8 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன. மாருதி, ஐசிஐசிஐ வங்கி, டைட்டன்,பவர்கிரிட், இந்துஸ்தான்லீவர், இன்டஸ்இன்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல் ஆகிய துறைப் பங்குகள் லாபத்தில் முடிந்தன.

நிப்டியைப் பொறுத்துவரை பொதுத்துறை வங்கிப் பங்குகள் மட்டுமே 1.4 சதவீதம் லாபத்தில் முடிந்தன. குறிப்பாக யுசிஓ வங்கி 20சதவீதம் லாபமீட்டியது. மற்ற துறைப் பங்குகள் அனைத்தும் சரிவில் முடிந்தன. ஆட்டோமொபைல், தகவல்தொழில்நுட்பத்துறை, எப்எம்சிஜி போன்ற துறைப் பங்குகள் சரிவில் முடிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறைப் பங்குகளில் லார்சன் அன்ட் டூப்ரோ, டெக்மகிந்திரா பங்குகள் அதிகளவில் வீழ்ச்சி அடைந்தன
 

click me!