யுபிஐ செயலிகளான கூகுள் பே(Google Pay), போன்பே(PhonePe), பேடிஎம்(Paytm) போன்றவற்றில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு விரைவில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுபிஐ(UPI) செயலிகளான கூகுள் பே(Google Pay), போன்பே(PhonePe), பேடிஎம்(Paytm) போன்றவற்றில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு விரைவில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பயனாளிகள் தற்போது கணக்கில் வராத ஏராளமான பணத்தை பரிமாற்றம் செய்துவருகிறார்கள். கட்டுப்பாடு வந்துவிட்டால் அவ்வாறு பரிமாற்றம் செய்வதற்கு கட்டுப்பாடு கொண்டுவரப்படும்.
ஆதாருடன் பான் கார்டு இணைத்து விட்டீர்களா? காலக்கெடு முடிகிறது!!
யுபிஐ-யை செயல்படுத்திவரும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(என்பிசிஐ), ரிசர்வ் வங்கியுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளது. அதாவது, தற்போது யுபிஐ செயலிகள் மூலம் நடக்கும் பணப்பரிமாற்றத்தை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்து, அந்தப் பரிந்துரையை டிசம்பர் 31ம்தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால், தற்போதுள்ள நிலவரப்படி கூகுள்பே, போன்பே, பேடிஎம் செயலிகளில் கணக்கு வைத்திருப்போர், ஒரு நாளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் ஒரு நாளுக்கு குறிப்பிட்ட அளவு பணம் மட்டும்தான், ஒரு நாளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பணப்பரிமாற்றம் என்று கொண்டுவரப்படலாம்.
ஜிஎஸ்டி சட்டத்தில் ஐபிசியின் கீழ் வரும் தண்டனைக் குற்றப்பிரிவை நீக்க மத்திய அரசு ஆலோசனை
மூன்றாம்தரப்பு செயலிகள் வழங்கும்(டிபிஏபி) நிறுவனங்களுக்கும் பரிமாற்றத்தின் அளவை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று என்பிசிஐ பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே பலகட்ட ஆலோசனை நடத்தப்பட்டு, அனைத்து அம்சங்களும் முழுமையாக விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் என்பிசிஐ அதிகாரிகள், நிதிஅமைச்சக அதிகாரிகள், ஆர்பிஐ அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனால், கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளில் பரிமாற்றம் செய்வதற்கு டிசம்பர் 31ம்தேதிக்குள் கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. என்பிசிஐ தனது பரிந்துரையை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி, அந்த பரிந்துரைகளை டிசம்பர் 31ம்தேதிக்குள் நடைமுறைப்படுத்துங்கள் என்று மட்டும் கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம், என்பிசிஐ அமைப்பும், தனது இறுதி முடிவை அதாவது செயலிகள் பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மூலம் FIFA-வுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?
2020ம் ஆண்டு என்பிசிஐ வெளியிட்ட உத்தரவில், தேர்டுபார்டி செயலிகள், யுபிஐ மூலம் நடந்த பரிமாற்றத்தை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதாவது கடந்த 3 மாதங்களில் எவ்வளவு மதிப்பிலான பரிமாற்றம் நடந்துள்ளதோ அந்த பரிமாற்றத்தில் இருந்து 30 சதவீதம் அளவை குறைக்க வேண்டும் எனத் தெ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.