ஏழைகள், நடுத்தர மக்களின் குளிர்பானம், ஒரு பாக்கெட்டில் 6 பேர் குடிக்கலாம் என்ற மலிவு விலையில் விற்கப்பட்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் அரீஸ் கம்பாட்டா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 85.
ஏழைகள், நடுத்தர மக்களின் குளிர்பானம், ஒரு பாக்கெட்டில் 6 பேர் குடிக்கலாம் என்ற மலிவு விலையில் விற்கப்பட்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் அரீஸ் கம்பாட்டா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 85.
தொழிலதிபர் பிரோஜ்ஷாவின் மகனான கம்பட்டா கடந்த 1962களில் தொழில்துறைக்கு வந்தார். அரீஸ் கம்பாட்டாவின் கண்டுபிடிப்பால் ஆரஞ்சு நிறத்தில் ரஸ்ஸான குளிர்பானம் கடந்த 1980களில் அறிமுகமாகியது.
இந்திய சந்தையில் வெளிநாட்டு குளிர்பானங்கள் இல்லாமல், லிம்கா, கோல்டு ஸ்பாட்,தம்ஸ்அப் போன்ற பானங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், அந்த நேரத்தில் விலை மலிவாகவும், ஒரு பாக்கெட் ரஸ்னாவில் குடும்பத்தில் 6 பேர் வரை குடிக்கலாம், 6 கிளாஸ் பருகலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டது.
இதனால் ஏழைகள், நடுத்தரக் குடும்பத்தினர் மத்தியில் ரஸ்னா குளிர்பானம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அதிலும் தொலைக்காட்சிகளில் வரும் “ஐ லவ்யூ ரஸ்னா” என்ற குழந்தையின் வசனம் வீடுகளில் அனைவரையும் கவர்ந்தது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மூலம் FIFA-வுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?
இந்த விளம்பரத்தின் மூலமாகவே பலரும் ரஸ்னாவை வாங்கிப் பருகினார்கள்.
இன்று ரஸ்னா குளிர்பானம் இன்றும் இந்தியாவில் லட்சக்கணக்கான வீடுகளில் குடிக்கப்பட்டாலும், உலகளவில் 60 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பன்னாட்டு குளிர்பானங்கல் பல்வேறு சுவைகளில், நிறங்களில் வந்தபோதிலும் ரஸ்னாவுக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை.
கடந்த 1940களில் ரஸ்னா தயாரிக்கும் பயோமா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலில் ரஸ்னா பவுடர், துணை நிறுவனத்துக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது, நேரடியாக நுகர்வோருக்கு விற்கப்படவில்லை. ஆனால், பின்னர் நேரடியாக நுகர்வோர் சந்தைக்குள் ரஸ்னா நிறுவனம் நுழைந்து, ஜாபே என்ற பெயரில் 1970களில் குஜராத்தில் மட்டும் விற்கப்பட்டது.பின்னர் நாளடைவில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ரஸ்னா என்று அறிமுகம் செய்யப்பட்டது.
முதலில் ரஸ்னா பாக்கெட் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஒரு பாக்கெட்டில் ஐஸ்கட்டிகள், தண்ணீர், சர்க்கரை சேர்த்தால் 32 கிளாஸ்வரை குடிக்கலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஒரு கிளாஸ் ரஸ்னாவின் விலை 15 பைசா என்ற அளவில் அடங்கியது.
அரீஸ் கம்பாட்டா வந்தபின் அவர் அறிமுகப்படுத்திய ரஸ்னா சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தது. பெரிய நிறுவனங்களின் குளிர்பானங்கள் விற்பனையையும் பின்னுக்குத்தள்ளி ரஸ்னா விற்பனை பட்டிதொட்டி, நகரம் வீடுகளில் எல்லாம் சக்கைபோடு போட்டது.
ரஸ்னா நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புபெற்றனர்.
அரீஸ் கம்பாட்டா மகன், பிரூஸ் கடந்த 1992ம் ஆண்டுதனது 18வயதில் நிறுவனத்தில் கால்பதித்தார். கிராமப்புறங்களில் மக்கள் ரஸ்னாவை குடிக்க வேண்டும் என்பதால், ரஸ்னா பாக்கெட் 2ரூபாய்க்கு விற்கப்பட்டது. மலிவான ரஸ்னா பாக்கெட் கிராமங்களிலும் அமோக வரவேற்பைப் பெற்றது.
அரீஸ் கம்பாட்டாவுக்கு மனைவி பெர்சிஸ், மகன்கள் பிரூஸ், டெல்னா, ருஸான் ஆகியோரும் உள்ளனர். தொழில்துறையில் சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசு கம்பாட்டாவுக்கு தேசிய குடிமகன் விருது வழங்கியது. அதிகமான வருமானவரி செலுத்தியதற்காக நிதிஅமைச்சகம்சார்பில் சம்மன் பத்ரா விருது வழங்கப்பட்டது.