Stock Market Today: ஏற்றத்துடன் பங்குச்சந்தை தொடக்கம்! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு

By Pothy RajFirst Published Nov 23, 2022, 9:55 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தை இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. வர்த்தகம் தொடங்கும் முன்பே சென்செக்ஸ் 400புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது.

மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தை இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. வர்த்தகம் தொடங்கும் முன்பே சென்செக்ஸ் 400புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது.

சர்வதேச காரணிகள் மந்தமாக இருந்தபோதிலும் இந்திய பங்குசந்தைகள் உற்சாகத்துடன் காணப்படுகின்றன. அமெரிக்க  பெடரல் வங்கி அறிவிப்பை எதிர்ப்பார்த்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்த போதிலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்குவதால் பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருக்கிறது.

சீனாவில் கொரோனா பரவல் கடந்த 2020ம் ஆண்டைப் போல் மாறுகிறது என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும் ஆசியச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. அமெரிக்கப் பங்குச்சந்தையும் நேற்று 2 மாதங்களில் இல்லாத உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருக்கும் கச்சா எண்ணெய் இருப்பு குறைந்துள்ளதையடுத்து, கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் காலை வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

ஏழைகளின் பானம்! ரஸ்னா குளிர்பான நிறுவனர் அரீஸ் கம்பாட்டா காலமானார்

காலை வர்த்தகம் தொடங்கும்முன்பே, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தகம் தொடங்கியதும் 200 புள்ளிகள் வரை உயர்ந்து, 61,613 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து, 18,293 புள்ளிகளில் செல்கிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில், 6 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் 26 பங்குகள் இழப்பிலும் உள்ளன. மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஏசியன்பெயின்ட்ஸ், டிசிஎஸ், ஐடிசி, ஹெச்யுஎல், என்டிபிசி ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன.

மாதம் ரூ.4,000சேமிப்பு! ஓய்வுகாலத்தில் ரூ.ஒரு கோடி, ரூ.35,000 பென்ஷன்:திட்டம் பற்றி தெரியுமா?

நிப்டியில் ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், சிப்லா, டாக்டர்ரெட்டீஸ் லேப்ஸ், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் லாபத்திலும், என்டிபிசி, ஹெச்யுஎல், ஐடிசி,ஓஎன்ஜிசி பங்குகள் சரிவிலும் உள்ளன

3 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் உயர்வு: சென்செக்ஸ் ஏற்றம்: பேடிஎம் அடி! PSB ஜோர்

நிப்டியில் ஆட்டோமொபைல் பங்குகள், ரியல்எஸ்டேட் பங்குகள், உலோகத்துறை பங்குகள், பொதுத்துறை வங்கி பங்குகள்,  லாபத்துடன் வாங்கப்படுகின்றன.


 

click me!