LIC Share :LIC-யின் இரு முக்கியமான பாலிசிகள் சந்தையிலிருந்து வாபஸ்! பாலிசிதாரர்களுக்கு பலன்கள் கிடைக்குமா?

By Pothy RajFirst Published Nov 23, 2022, 3:31 PM IST
Highlights

எல்ஐசி(LIC) நிறுவனத்தின் இரு முக்கிய காப்பீடு திட்டங்களான ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் இன்சூரன்ஸ் ஆகியவை சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்ஐசி(LIC) நிறுவனத்தின் இரு முக்கிய காப்பீடு திட்டங்களான ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் இன்சூரன்ஸ் ஆகியவை சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரு காப்பீடுகளுக்கும் மறுகாப்பீடு வீதங்கள் தொடர்ந்து அதிகரித்ததையடுத்து, இரு திட்டங்களும் சந்தையிலிருந்து திரும்பப்பெறப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

Gold Rate Today: தங்கம் விலை வீழ்ச்சி! மிஸ் பண்ணாதிங்க, வாங்கிருங்க! இன்றைய நிலவரம் என்ன?

ஆனால், இந்த இரு காப்பீடு திட்டங்களை எல்ஐசி நிறுவனம் திரும்பப் பெற்றாலும், ஏற்கெனவே காப்பீடு பெற்றவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் வராது. ஏற்கெனவே ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் காப்பீடு பெற்றவர்களுக்கு எல்ஐசி நிறுவனம் அளித்த பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்துப் பலன்களையும் பெறுவார்கள். இந்தக் காப்பீடு தாரர்களுக்கு பாலிசியும் கிடைக்கும், ப்ரீமியம் தொகையையும் தொடர்ந்து செலுத்தலாம். 

ஆனால் இனிவரும் காலங்களில் ஜீவன் அமர், டெக் டெர்ம் பாலிசிகள் புதிதாக  விற்பனை செய்யப்படாது. 
ஜீவன் அமர் பாலிசி என்பது பங்கேற்பு அல்லாத, தனிநபர்களுக்கான, இடர்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட காப்பீடாகும்.

மாதம் ரூ.4,000சேமிப்பு! ஓய்வுகாலத்தில் ரூ.ஒரு கோடி, ரூ.35,000 பென்ஷன்:திட்டம் பற்றி தெரியுமா?

அதாவது பாலிசிதாரர்கள் காப்பீடு காலத்தில் திடீரென காலமாகிவிட்டால் அவரின் குடும்பத்தாருக்கு முழுமையான நிதிப்பாதுகாப்பு கிடைக்கும். இந்த காப்பீட்டை எல்ஐசி முகவர்கள், கார்ப்பரேட் ஏஜென்ட், ப்ரோக்கர்கள், காப்பீடு சந்தை நிறுவனத்திடம் வாங்க முடியும்.

எல்ஐசி டெக் டெர்ம் பாலிசி என்பது பங்கேற்பு அல்லாத, லாபம் இல்லாத, முழுக்க காப்பீடு தாரர் மற்றும் குடும்பத்தாருக்கு நிதிப்பாதுகாப்பு அளிக்கப்பதாகும்.இந்த டெக் டெர்ம் பாலிசி ஆன்லைன் மூலம் மட்டுமே கிடைக்கும்

click me!