Gold Rate Today: தங்கம் விலை விர்ர்..! ஒரேநாளில் சவரனுக்கு ரூ.280 உயர்வு: காரணம், நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Nov 24, 2022, 10:17 AM IST
Highlights

தங்கம் விலை தொடர்ந்து 6 நாட்களாகச் சரிந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை தொடர்ந்து 6 நாட்களாகச் சரிந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. 
தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு 280 ரூபாயும் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,896ஆகவும், சவரன், ரூ.39,168 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை தொடர் வீழ்ச்சி ! நடுத்தரக் குடும்பத்தினர் ரிலாக்ஸ்! இன்றைய நிலவரம் என்ன?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ரூ.4,931 ஆகவும், சவரனுக்கு 280 ரூபாய் ஏற்றம் கண்டு, ரூ.39 ஆயிரத்து 448ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,931க்கு விற்கப்படுகிறது.

விலை உயர காரணம் என்ன

அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், வட்டிவீதம் பெரிதாக உயர்த்தப்படாது என்ற உறுதியான தகவல் நேற்று வெளியானது. இதனால், சர்வதேச சந்தையில் டாலர் குறியீடு சரிந்தது, மற்ற கரன்சிகளின் மதிப்பும் வலுப்பெற்றது. அமெரிக்க சந்தையும் ஏற்றத்துடன் முடிந்தன, ஆசியச்சந்தையிலும் உயர்வு காணப்பட்டது.

தங்கம் வாங்க பொன்னான நேரம்! குறையும் விலை, மறந்துடாதிங்க! இன்றைய நிலவரம் என்ன?

இதனால் அமெரிக்க பங்குப்பத்திரங்களில் முதலீடு குறைந்து தங்கத்தின் பக்கம் முதலீடு திரும்பக்கூடும், தேவை அதிகரிக்கும் என்பதால், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. பெடரல் வங்கியின் முடிவுக்காக கடந்த சில நாட்களாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்த்து வந்தநிலையில், அது குறித்த தெளிவான அறிவிப்பால், தங்கத்தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளனர். 

இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக சரிந்துவந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280உயர்ந்துள்ளது. தங்கம் விலை குறைந்ததால் நடுத்தரக் குடும்பத்தினருக்கும், ஏழை மக்களுக்கும் ஆறுதலை அளித்தது, ஆனால், இப்போது மீண்டும் உயர்ந்துள்ளது அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.760வரை குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. 

தங்கம் விலை வீழ்ச்சி! மிஸ் பண்ணாதிங்க, வாங்கிருங்க! இன்றைய நிலவரம் என்ன?

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.67.50 ஆக இருந்தநிலையில்,  இன்று காலை கிராமுக்கு 70 காசு உயர்ந்து, ரூ.68.20 ஆக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.67,500 ஆக இருந்தநிலையில், 800 ரூபாய் அதிகரித்து, ரூ.68,200 ஆக ஏற்றம் கண்டுள்ளது.

click me!