தனிநபர் ஒருவரின் ஆதார் அட்டையை அடையாளமாக ஏற்பதற்கு முன், நிறுவனங்கள், அரசு அமைப்புகள் அதை பரிசோதித்து ஏற்க வேண்டும் என்று ஆதார் வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ(UIDAI) அமைப்பு தெரிவித்துள்ளது.
தனிநபர் ஒருவரின் ஆதார் அட்டையை அடையாளமாக ஏற்பதற்கு முன், நிறுவனங்கள், அரசு அமைப்புகள் அதை பரிசோதித்து ஏற்க வேண்டும் என்று ஆதார் வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ(UIDAI) அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து யுஐடிஏஐ அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
பாஸ்போர்டில் ஒற்றைப் பெயர்தான் இருப்பவர்கள் கவனத்திற்கு ! UAE செல்லத் தடை!
ஒருவரின் ஆதாரை அடையாளமாக அட்டையாகவோ அல்லது மின்னணு ரீதியாகவோ ஏற்கும் முன், எம்ஆதார்செயலி அல்லது ஆதாரை கியூஆர் குறியீடு ஸ்கேனர் மூதம் பரிசோதித்து ஏற்க வேண்டும் என்று மாநில அரசுகளை உதய் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதார் அட்டையை அடையாளமாக ஒருவர் சமர்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதை கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் உத்தரவிடவேண்டும் எனக் உதய் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதார் அட்டையை கடிதமாகவோ அல்லது இஆதார் அல்லது ஆதார் பிவிசி கார்டு, அல்லது எம்ஆதார் எந்த வடிவத்தில் ஒருவர் வழங்கினாலும், அதை பரிசோதிக்க கியூஆர் குறியீடு முறையீடு மூலம் பரிசோதிக்க முடியும். இதற்காகவே எம்ஆதார் செயலி மற்றும் ஆதார் கியூஆர் குறியீடு ஸ்கேனர் இருக்கிறது. இதில் பரிசோசித்து ஒருவரின் விவரங்களை ஆய்வு செய்ய முடியும்.
LIC-யின் இரு முக்கியமான பாலிசிகள் சந்தையிலிருந்து வாபஸ்! பாலிசிதாரர்களுக்கு பலன்கள் கிடைக்குமா?
இந்த கியூஆர் குறியீடு ஸ்கேன் செய்யும் செயலி கூகுள் ப்ளேஸ்டோரில் இலவசமாக பதவிறக்கம் செய்யலாம்.
ஒருவர் அளிக்கும் ஆதார் அட்டையை பரிசோதிக்கும் போது அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது பாதுகாப்பான முறையில் பயன்படுத்துப்படுகிறதா என்பதை அறிய முடியும். சமூக விரோதிகள் ஆதார் அட்டையை தவறுதலாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒருவர் வழங்கும் ஆதார் விவரங்களை அப்படியே ஏற்கக்கூடாது.
ஆதார் அட்டையை தனிநபரின் அடையாளமாக வழங்கப்படும் போது, அந்த எண்ணை பயன்படுத்துவதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையை பரிசோதித்து அறியவேண்டியது அவசியம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் யுஐடிஏஐ அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.