
ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் வேலையின்மை வீதம் 7.2 சதவீதாமாகக் குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு இதே மாதங்களில் வேலையின்மை 9.8 சதவீதமாக இரு்தது குறிப்பிடத்தக்கது.
வேலையின்மை என்பது, வேலைபார்க்கும் தகுதியுள்ள வயதில் எத்தனைபேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதை வைத்து கணக்கிடும் சதவீதமாகும். அந்த வகையில் 2021, ஜூலை-செப்டம்பரில் நாட்டில் வேலையின்மை வீதம் மிகவும் அதிகபட்சமாக இருந்தது. அந்த நேரத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
ஆதாரை அட்டையை அப்படியே ஏற்காதிங்க! ஆய்வு செய்யுங்க! மாநிலங்களுக்கு UIDAI அறிவுறுத்தல்
ஆனால், தற்போது பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது, தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து வருவதையடுத்து, வேலையின்மை வீதம் குறைந்துள்ளது.
15வயதுக்கு மேற்பட்டவ்ரகளுக்கான வேலையின்மை வீதம் 2022, ஏப்ரல் முதல் ஜூன் வரை 7.6 சதவீதமாக இருந்து என்று பிஎல்எப்எஸ் ஆய்வு தெரிவிக்கிறது. இது நகர்ப்புறங்களில் 15வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இடையே 2022, ஜூலை முதல் செப்டம்பர் வரை 9.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 11.6 சதவீதமாக உயர்ந்திருந்தது. 2022, ஏப்ரல்-ஜூனில் 9.5 சதவீதமாக அதிகரித்திருந்தது.
பாஸ்போர்டில் ஒற்றைப் பெயர்தான் இருப்பவர்கள் கவனத்திற்கு ! UAE செல்லத் தடை!
ஆண்களைப் பொறுத்தவரை 2022, ஏப்ரல்-ஜூன் மாதங்களில் வேலையின்மை வீதம் 7.1 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை-செப்டம்பர் மாதங்களில் 6.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 9.3 சதவீதமாக இருந்தது.
நகர்ப்புறங்களில் 15வயதுக்கு மேற்பட்டோர் வேலையில் ஈடுபடுவது ஜூலை-செப்டம்பரில் 47.9 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 46.9 சதவீதமாகஇருந்தது. 2022, ஏப்ரல் ஜூன் மாதங்களில் 47.5 சதவீதமாக இருந்தது.
பிரிட்டனின் ஆசியக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரதமர் ரிஷி சுனக், அவரின் மனைவிக்கு முதல்முறையாக இடம்
பிஎல்எப்எஸ் சர்வேயை ஒவ்வொரு காலாண்டிலும் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டு வருகிறது. இந்த சர்வே மூலம் நாட்டில் வேலையின்மை வீதம், வேலைசெய்யும் மக்கள் வீதம், தொழிலாளர் பங்களிப்பு வீதம் ஆகியவற்றை அறிய முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.