
இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து இன்றும் சரிவில் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் மீள முடியாமல் வீழ்ந்தன.
மும்பை பங்குச்சந்தையில் நேற்றுஒரேநாளில் 927 புள்ளிகள் வீழ்ந்தநிலையில் இன்று 140 புள்ளிகள் சரிந்துள்ளது. கடந்த இருநாட்களில் மட்டும் 1060 புள்ளிகளும், கடந்த 5 நாட்களில் மட்டும் 1600 புள்ளிகளுக்க மேல் வீழ்ந்துள்ளது.
பங்குச்சந்தை படுவீழ்ச்சி|ரூ.7 லட்சம் கோடி காலி!சென்செக்ஸ்927 புள்ளிகள் சரிவு:4 காரணங்கள்!
அமெரிக்காவின் பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தப்போகிறது என்ற தகவல் முதலீட்டாளர்களை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையும் , ஆசியச் சந்தைகளும் சரிந்தது, இந்திய சந்தையில் மோசமாக நேற்று எதிரொலித்தது. இந்த பாதிப்பில் இருந்து இந்தியச் சந்தை இன்றும் மீளவில்லை. அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு வெளியேறத் தொடங்கியுள்ளது.
இதனால் காலையிலிருந்து சரிவில் தொடங்கிய பங்குசந்தை வர்த்தகத்தின் இடையே 100 புள்ளிகள்வரை உயர்ந்தாலும் பின்னர் அதைத் தக்கவைக்க முடியாமல்வீழ்ந்தது.மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 140 புள்ளிகள் சரிந்து, 59,605 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 43புள்ளிகள் குறைந்து, 17,511புள்ளிகளில் நிலைபெற்றது.
பங்குச்சந்தையில் தொடரும் வீழ்ச்சி| சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு! நிப்டி இறக்கம்
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 13 நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் முடிந்தன. மற்ற 17 நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, சன்பார்மா, கோடக்வங்கி, மாருதி,எச்சிஎல் டெக், டிசிஎஸ்,ரிலையன்ஸ் ஆகியபங்குகள் லாபத்தில் முடிந்தன.
நிப்டி துறைகளில் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, எப்எம்சிஜி, உலோகம், பொதுத்துறை வங்கிப் பங்குகள் லாபமடைந்தன. நிப்டியில் ஐடிசி, யுபிஎல், கோல் இந்தியா,ஹின்டால்கோ, டிசிஎஸ்பங்குகள் அதிக லாபமடைந்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.