ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு எதிராக இன்டஸ்இன்ட் வங்கி எடுக்கும் திவால் நடவடிக்கைக்கு என்சிஎல்டி அனுமதி அளித்துள்ளது.
ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு எதிராக இன்டஸ்இன்ட் வங்கி எடுக்கும் திவால் நடவடிக்கைக்கு என்சிஎல்டி அனுமதி அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் சோனி நிறுவனத்துடன் ஜீ என்டர்டெயின்ட்மென்ட் இணைவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்இரு நிறுவனங்கள் இணைவு தாமதம் ஆகிறது.
ஜீ என்டர்டெியன்ட்மென்ட் நிறுவனத்துக்கு எதிராக திவால் நடவடிக்கை காரணமாக இன்று காலை பங்குச்சந்தையில் ஜீ நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் சரிந்தன. ஏறக்குறைய பங்கு மதிப்பு 12 சதவீதம் சரிந்து, ரூ.178.60க்கு விற்பனையாகிறது. கடந்த ஓர் ஆண்டில் ஜீ நிறுவனப் பங்கு விலை குறைவு இதுதான் மோசமாகும்.
பங்குச்சந்தையில் தொடரும் வீழ்ச்சி| சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு! நிப்டி இறக்கம்
ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு எதிராக இன்டஸ்இன்ட் வங்கி எடுக்கும் திவால் நடவடிக்கைக்கு தேசிய கம்பெனி தீர்ப்பாயம் நேற்று அனுமதி அளித்தது. எஸ்ஸெல் குழுமத்தின் சிதி நெட்வொர்க் நிறுவனத்துக்கு ரூ.150 கோடி கடனாக இன்டஸ்இன்ட் வங்கி வழங்கி இருந்தது. இந்த கடனுக்கு காப்பாளராக ஜீ என்டர்டெயின்மென்ட் இருந்தது. ஆனால், கடனை செலுத்த தவறியதையடுத்து, திவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்கிடையே ஜீ நிறுவனம், தனது ஜீ என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தை சோனி நெட்வொர்க்குடன் இணைக்க கடந்த 2021ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆனால், ஜீ குழுமத்தின் சில பங்குதாரர்கள், இன்டஸ்இன்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை,இந்த இணைப்புக்கு எதிராக என்சிஎல்டியில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் ஜீ நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தியபின்புதான் சோனி நிறுவனத்துடன் இணைய வேண்டும் என்று தெரிவித்தனர்.
வெளிநாட்டு பயணத்துக்காக மாதம்தோறும் 100 கோடி டாலர் செலவிடும் இந்தியர்கள்:RBI அறிக்கை
ஆனால், ஜீ என்டர்டெயின்ட்மென்ட் குழுமத்தில் உள்ள 90 சதவீத உறுப்பினர்கள் சோனி நெட்வொர்க்குடன் இணைவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டனர் என்சிஎல்டி, பங்குதாரர்கள், சிசிஐ அமைப்பும் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. ஆதலால், இந்த இணைவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டமனுக்கள் செல்லாது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இப்போதுள்ள சூழலில் ஜீ குழுமத்துக்கு இரு வாய்பபுகள் மட்டுமே உள்ளன. ஒன்று என்சிஎல்டி உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வது அல்லது, வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்துவதி சோனி நெட்வொர்க்குடன் இணைந்துவிடுவதாகும். ஆனால் சோனி நெட்வொர்க்குடன் ஜீ நிறுவனம் இணைய இன்னும் சில மாதங்களாகும் எனத் தெரிகிறது. இதனால் ஜீ நிறுவனப் பங்கு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது