Share Market Today: ரூ.16 லட்சம் கோடி அம்போ! பாதளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 980 புள்ளிகள் வீழ்ச்சி

By Pothy RajFirst Published Dec 23, 2022, 3:41 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைள் வாரத்தின் கடைசி நாளான இன்று மோசமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்தன. தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைள் வாரத்தின் கடைசி நாளான இன்று மோசமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்தன. தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.

கடந்த 7 நாட்கள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் முதலீ்ட்டாளர்கள் ரூ.5.50 லட்சம் கோடியே இழந்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுகிறதா? வாய்ப்பு இருக்கிறதா?

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 980 புள்ளிகள் வீழ்ந்து, 59,845 புள்ளிகளில் முடிந்தது. கடந்த சில வாரங்களாக 60ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் இருந்த பிஎஸ்இ இன்று மோசமான சரிவைச் சந்தித்தது.

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 320 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 17,860 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டியும், ஏற்ககுறைய 18ஆயிரம் புள்ளிகளை நவம்பருக்குப்பின் இப்போது இழந்தது. கடந்த அக்டோபர் 28ம் தேதிக்குப்பின் நிப்டி சந்திக்கும் மோசமான சரிவாகும். 

நாட்டில் பணவீக்கம் குறைந்து, கட்டுக்குள் வரும்வரை வட்டிவீதம் உயர்வு இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இது முதலீ்ட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. 

தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது ! கிராமுக்கு ரூ.58 வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன

இது தவிர உலகளவில் பொருளாதார மந்தநிலை உருவாகக்கூடும் என்ற கணிப்புகள், பல்வேறு நாடுகளில்மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது, இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது போன்றவை சமிக்ஞைகள் முதலீட்டாளர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தின. இதனால் பங்குகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாக லாபநோக்கில் விற்கத் தொடங்கியதால் சந்தையில் சரிவு காணப்பட்டது.

இன்றைய நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நேற்றை வர்த்தகம் முடிவில் சந்தையின் மதிப்பு ரூ.280.55 லட்சம் கோடியாக இருந்தநிலையில் இன்றையமுடிவில் ரூ.275.01 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

கடந்த 7 நாட்கள் வர்த்தகத்தில் மட்டும் ரூ.16 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். கடந்த 14ம் தேதி பங்குச்சந்தை மதிப்பு ரூ.291.25 லட்சம் கோடியாக இருந்தநிலையில் இன்று ரூ.275.01 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது

வீழ்ச்சியில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிவு, நிப்டி 18,000க்கு கீழ் சென்றது

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், அனைத்துப் பங்குகளுமே சரிவில் முடிந்தன. நிப்டியில் அனைத்து துறைப்பங்குகளுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. 

பொதுத்துறை வங்கி 5%, உலோகம் 3%, எரிசக்தி 3%, ஆட்டோமொபைல், ரியல்எஸ்டேட் ஆகிய துறைப் பங்குகள் தலா 2 % சரிந்தன. எம்எம்சிஜி, தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகளும் தலா 1.5% வீழ்ச்சி அடைந்தன. நிப்டியில் அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், ஹின்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தன

click me!