Share Market Today: வீழ்ச்சியில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிவு, நிப்டி 18,000க்கு கீழ் சென்றது

By Pothy RajFirst Published Dec 23, 2022, 9:53 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், 450 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 18ஆயிரத்துக்கும் கீழும் சரிந்துள்ளது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், 450 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 18ஆயிரத்துக்கும் கீழும் சரிந்துள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கி, பணவீக்கத்தைக் குறைக்கும் வகையில் வட்டிவீதத்தை உயர்த்துவதில் தயக்கம் காட்டப்போவதில்லை என்ற தகவல் வெளியானது. இது ஆசியப் பங்குச்சந்தையிலும் முதலீட்டாளர்களை சுணக்கம் அடையச் செய்தது.

பங்குச்சந்தையில் கரடி ராஜ்ஜியம்:சென்செக்ஸ் 60ஆயிரமாகச் சரிவு! நிப்டி வீழ்ச்சி

இது தவிர சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா உயிரிழப்புகள், பரவல் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன. உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் கொரோனா அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சிக்குவிடப்பட்ட சவாலாக இருக்கிறது என்று முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்திருப்பதால், அசத்துடனே முதலீட்டாளர்கள் முதலீட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதலீட்டாளர்களுக்கு நிம்மதியளித்த பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி உயர்வு

இதனால்தான் நேற்று காலையில் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் பிற்பகலில் சரிந்தது. இன்று காலையும் வர்த்தகம் தொடங்கும்முன்பே கொரோனா பரவல் அச்சத்தால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடனே இருந்தனர். முதலீட்டை வெளியே எடுக்கவும், பங்குகளை விற்று லாபநோக்கம் பார்ப்பதிலுமே முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளதால் சரிவு தொடர்ந்து வருகிறது. 

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 458 புள்ளிகள் குறைந்து, 60,368 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 138 புள்ளிகள் குறைந்து, 17,988 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், சன்பார்மா, ஹெச்சிஎல்டெக், என்டிபிசி, நெஸ்ட்லே இந்திய ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. மற்ற 26 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன.

ஏறியவேகத்தில் இறங்கிய பங்குச்சந்தை: என்ன காரணம்?சென்செக்ஸ் 635 புள்ளிகள் வீழ்ச்சி

நிப்டியில் மருந்துத்துறை மட்டும் 0.93 சதவீதம் வளர்ச்சியில் உள்ளது. மற்ற துறைப் பங்குகளும் சரிந்துள்ளன. பொதுத்துறை வங்கி 1.85%, உலோகம் 1.73%, ஊடகம் 1.43%, தகவல்தொழில்நுட்பம் 0.72%, எப்எம்சிஜி 0.63%, ஆட்டோமொபைல் 1.72%  எனச் சரிந்துள்ளன.
 

click me!