Bank Holiday January 2023:2023, ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: முழுவிவரம் இதோ

By Pothy Raj  |  First Published Dec 22, 2022, 3:01 PM IST

2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை வருகிறது என்று ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை வருகிறது என்று ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறையின்படி, மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை, இதுதவிர 4 ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் வருகிறது. 

Tap to resize

Latest Videos

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுகிறதா? வாய்ப்பு இருக்கிறதா?

ஆக 6 நாட்கள் வழக்கமான விடுமுறையில் கழிந்துவிடும். மீதமுள்ள 8 நாட்கள் விடுமுறை என்பது அந்தந்த மண்டலங்கள், மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்துக்கு பண்டிகை நாட்கள் மாறுபடும் என்பதால் அங்கு விடுமுறையும் மாறுபடும். வங்கிகளுக்கு விடுமுறைஇருந்தாலும், ஆன் லைன் சேவை வழக்கமாக செயல்படும்.

2023 ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள்

ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினம் என்பதாலும் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறையாகும்.

ஜனவரி-2ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டுத்துக்காக மணிப்பூரில் இம்பால் நகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

பிஎப் சந்தாரார்கள் இந்த வழியில் மட்டும் பணத்தை டெபாசிட் செய்யாதிங்க! இபிஎப்ஓ எச்சரிக்கை

ஜனவரி 4ம் தேதி அசாம், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் சக்கான் கான் காய் எனும் பண்டிகை கொண்டாடப்படுவதையடுத்து, இந்த 3 மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கும் விடுமுறையாகும்.

ஜனவரி 8-ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 11- புதன்கிழமை- மிஷனரி நாள்(மிசோரம்)

ஜனவரி 14-2வது சனிக்கிழமை விடுமுறை

ஜனவரி 15-ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

தகுதியிருந்தும் கடனைச் செலுத்தாத டாப்50 நபர்கள் மட்டும் ரூ.93 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு பாக்கி

ஜனவரி 22-ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஜனவரி 23- திங்கள்கிழமை- நேதாஜி பிறந்தாள்(திரிபுரா, மே.வங்கத்தில் விடுமுறை)

ஜனவரி 25- புதன்கிழமை இமாச்சலப்பிரதேசம் உதயமான நாள் 

ஜனவரி 26- வியாழக்கிழமை- குடியரசு தினம் 

ஜனவரி 29- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஜனவரி 31- திங்கள்கிழமை மி-டாம்-மி-பி அசாமில் விடுமுறை


 

click me!