Stock Market Today: முதலீட்டாளர்களுக்கு நிம்மதியளித்த பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி உயர்வு

By Pothy RajFirst Published Dec 22, 2022, 10:04 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

ஐரோப்பிய சந்தைகள் நேற்று சாதகமாகவும், ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன, அமெரிக்கச் சந்தையும் இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவு உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தது. அமெரிக்காவின் நைக் மற்றும் பெடெக்ஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபமும் அதிகரித்தது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தையின் ஏற்றம்,ஆசியச் சந்தையிலும் எதிரொலித்து உயர்வுடன் முடிந்தது.

ஏறியவேகத்தில் இறங்கிய பங்குச்சந்தை: என்ன காரணம்?சென்செக்ஸ் 635 புள்ளிகள் வீழ்ச்சி

இவை அனைத்தையும் கவனித்த இந்திய முதலீட்டாளர்கள் காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே உற்சாகமாகக் காணப்பட்டனர். இதனால் வர்த்தகம் தொடங்கு முன்பே மும்பை பங்குச்சந்தை 300 புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது. இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா பரவல் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவது கண்டு முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

காலை வர்த்தகம் தொடங்கியும் ஏற்ற, இறக்கத்தில் சென்ற மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 189 புள்ளிகள் அதிகரித்து, 61,256 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 54 புள்ளிகள் உயர்ந்து, 18,253 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: காரணம் என்ன? சென்செக்ஸ், நிப்டி ஏறுமுகம்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில், 7 நிறுவனப் பங்குகள் விலை சரிந்துள்ளன, மற்ற 23 பங்குகள் லாபத்தில் உள்ளன. இன்டஸ்இன்ட்வங்கி, நெஸ்ட்லே இந்தியா, என்டிபிசி, லார்சன்அன்ட்டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், மாருதி, ஆக்சிஸ் வங்கிப் பங்குகள் சரிவில் உள்ளன.

21-ம் தேதிவரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,119 கோடிரூபாய் மதிப்புள்ள பங்குகளை சந்தையில் விற்பனை செய்துள்ளனர், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.1,757 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். உள்நாட்டு முதலீட்டாலர்களின் வலிமையான வாங்கும் திறன், ஆதரவால்தான் பங்குச்சந்தை மோசமான சரிவை நோக்கிச் செல்லாமல் இருக்கிறது

ரூ.3.5 லட்சம் கோடி காலி!பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சரிவிலிருந்து மீண்டது சென்செக்ஸ்,நிப்டி

நிப்டியில் மருந்துத்துறை, தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டுமே உயர்வில் உள்ளன. மற்ற துறைகளான பொதுத்துறை வங்கி, உலோகம், ஆட்டோமொபைல், வங்கித்துறை பங்குகள் சரிவில் உள்ளன.


 

click me!