Share Market Today: ஏறியவேகத்தில் இறங்கிய பங்குச்சந்தை: என்ன காரணம்?சென்செக்ஸ் 635 புள்ளிகள் வீழ்ச்சி

By Pothy RajFirst Published Dec 21, 2022, 3:53 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சரிந்தநிலையில் முடிந்தன. காலை ஏற்றத்துடன் தொடங்கி, மாலை வீழ்ச்சி அடைந்தது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சரிந்தநிலையில் முடிந்தன. காலை ஏற்றத்துடன் தொடங்கி, மாலை வீழ்ச்சி அடைந்தது.

என்ன காரணம்
சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பதும், அமெரிக்கா, பிரிட்டன் சந்தைகள், ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்ததும் இந்தியச் சந்தை காலை உற்சாகமாக வர்த்தகத்தை தொடங்கியது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகளும் ஏற்றத்துடன் நகர்ந்தன.

பாதாளத்தில் பாய்ந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 550 புள்ளிகள் வீழ்ச்சி! என்ன காரணம்?

ஆனால், சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதையொட்டி, இந்தியாவும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

 இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இன்று ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கவனத்துடன் கண்காணிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது மட்டுமல்லாமல் கொரோனா பரவல் ஓய்ந்துவிடவில்லை என்றும் மாண்டவியா எச்சரித்தார்.

ரூ.3.5 லட்சம் கோடி காலி!பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சரிவிலிருந்து மீண்டது சென்செக்ஸ்,நிப்டி

உலகளவில் மீண்டும் கொரோனா பரவல் வரும் என்ற அச்சத்தால் பிற்பகலுக்குப்பின் சந்தையில் வர்த்தகம் சரியத் தொடங்கியது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப எடுக்கத் தொடங்கியதாலும், பங்குகளை விற்றதாலும் மளமளவென வீழ்ச்சி ஏற்பட்டது.

இது மட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில், நாட்டில் பணவீக்கம் குறைந்திருப்பது சிறப்பானது என்றாலும் இன்னும் முழுமையாகக் குறையவில்லை.  இன்னும் கட்டுக்குள் வர வேண்டியுள்ளது. உள்நாட்டு தேவையால் மட்டுமே பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று தெரிவித்தது. இதுவும் முதலீட்டாளர்களை பதற்றம் அடையச் செய்தது. 

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 635 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 61,067 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 200 புள்ளிகள் குறைந்து, 18,199 புள்ளிகளாக சரிந்தது. 

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: காரணம் என்ன? சென்செக்ஸ், நிப்டி ஏறுமுகம்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் சன்பார்மா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, என்டிபிசி, விப்ரோ ஆகிய பங்குகள் மட்டுமே உயர்ந்தன. மற்ற 23 பங்குகள் மதிப்பு சரிந்தது.

நிப்டியில், மருந்துத்துறை 2.52 சதவீதம் வளர்ச்சி அடைந்தது, அதைத்தொடர்ந்து தகவல்தொழில்நுட்பத்துறை 0.47சதவீதம் உயர்ந்தது. மற்றவகையில் பொதுத்துறை வங்கி, ஆட்டமொபைல், வங்கித்துறை, ஊடகம், எரிசக்தி, எப்எம்சிஜி, ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் சரிந்தன.

click me!