Share Market Today: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: காரணம் என்ன? சென்செக்ஸ், நிப்டி ஏறுமுகம்

By Pothy RajFirst Published Dec 21, 2022, 9:46 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடந்த இரு நாட்களுக்குப்பின் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடந்த இரு நாட்களுக்குப்பின் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பதும், அமெரிக்கா, பிரிட்டன் சந்தைகள், ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்ததும் இந்தியச் சந்தை உயர்வதற்கு முக்கியக் காரணமாகும்.

ரூ.3.5 லட்சம் கோடி காலி!பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சரிவிலிருந்து மீண்டது சென்செக்ஸ்,நிப்டி

அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த 4 நாட்களாக சரிந்து வந்தநிலையில் நேற்று உயர்வுடன் முடிந்தது. பிரிட்டன் சந்தையும் ஏற்று ஏற்றத்துடன் முடிந்தது. இதனால், ஆசியப் பங்குச்சந்தையும் சாதகமாகத் தொடங்கின. இதன் எதிரொலி இந்தியச்சந்தையில் இருந்ததால் காலை முதலே வர்த்தகம் உற்சாகமாக நடந்து வருகிறது.

தங்கப் பத்திரம் சிறந்ததா, கோல்ட் இடிஎப் லாபமானதா? முதலீட்டுக்கு எது சரியான தேர்வு?

சீனா, அமெரி்க்கா, தென் கொரியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவருவது கவலைக்குரியதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் உள்நாட்டில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கி மாற்றுவதால், சந்தையில் சுணக்கம் இல்லாமல் செல்கிறது.

காலை வர்த்தகம் தொடங்கும்முன்பே மும்பை பங்குச்சந்தையில் 200 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது.காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 132 புள்ளிகள் உயர்ந்து, 61,835 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 42 புள்ளிகள் அதிகரித்து, 18,428 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது

தகுதியிருந்தும் கடனைச் செலுத்தாத டாப்50 நபர்கள் மட்டும் ரூ.93 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு பாக்கி

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், ஹெச்டிஎப்சி, மாருதி, ஐடிசி, டைட்டன் ஆகிய 4 நிறுவனப் பங்குகளைத் தவிர மற்ற 26 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் உள்ளன.

நிப்டியைப் பொறுத்தவரை, பொதுத்துறை வங்கிப் பங்கு 1.08% லாபத்தில் உள்ளன. மருந்துத்துறை 0.63%, உலோகம் 0.52%, ஊடகம் 0.58%, தகவல்தொழில்நுட்பம் 0.89%, ஆட்டமொபைல் 0.46% ,ரியல்எஸ்டட் 0.92% என அனைத்து துறைகளும் ஏற்றத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.

click me!