Share Market Today:ரூ.3.5 லட்சம் கோடி காலி!பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சரிவிலிருந்து மீண்டது சென்செக்ஸ்,நிப்டி

By Pothy RajFirst Published Dec 20, 2022, 3:51 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடும் ஊசலாட்டத்துடன் சரிவுடன் முடிந்தது. மிகவும் மோசமாகத் தொடங்கினாலும் பிற்பகலில் சந்தையில் ஏற்றம் ஏற்பட்டு சரிவிலிருந்து மீண்டது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடும் ஊசலாட்டத்துடன் சரிவுடன் முடிந்தது. மிகவும் மோசமாகத் தொடங்கினாலும் பிற்பகலில் சந்தையில் ஏற்றம் ஏற்பட்டு சரிவிலிருந்து மீண்டது.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிந்து, 61,702 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 35 புள்ளிகள் குறைந்து, 18,385 புள்ளிகளில் வர்த்தகத்தில்நிலை பெற்றது.

சர்வதேச அளவில் பாதகமான சூழலைக் கண்ட முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதற்குப் பதிலாக விற்பதில் ஆர்வம் காட்டினர்.இதனால் காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிவு தொடர்ந்து 600 புள்ளிகள் வரை இழந்தது. ஆனால், பிற்பகுதியில் சந்தையில் ஏற்றம் காணப்பட்டு சென்செக்ஸ்,நிப்டி மீண்டன. சென்செக்ஸ் 550 புள்ளிகள் வரை மீண்டபோதிலும் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. 

பாதாளத்தில் பாய்ந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 550 புள்ளிகள் வீழ்ச்சி! என்ன காரணம்?

பங்குச்சந்தையில் இன்று மிகப்பெரிய சரிவு ஏற்படுவதற்கு 5 முக்கியக் காரணங்கள் உள்ளன. 

1.    ஜப்பான் வங்கியின் வட்டிவீத உயர்வு

2.    சர்வதேச சந்தைச் சூழல்

3.    உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம்

4.    பங்குப்பத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஆதாயம்அதிகரித்திருப்பது

5.    டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு 

தகுதியிருந்தும் கடனைச் செலுத்தாத டாப்50 நபர்கள் மட்டும் ரூ.93 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு பாக்கி

இந்த 5 காரணிகள்தான் பங்குச்சந்தையில் காலையில் சரிவுக்கு காரணமாக அமைந்தன. இந்த டிசம்பர் மாதம் தொடங்கி 20 நாட்கள் ஆகியுள்ள நிலையில் பங்குச்சந்தை இதுவரை 700 புள்ளிகளை இழந்துள்ளது.

கடந்த மாதம் 2 ஆயிரம் புள்ளிகளை இழந்துள்ளது.டிசம்பர் மாதத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பும் ரூ.3.50 லட்சம் கோடி குறைந்துள்ளது.

வருகிறது ‘வந்தே மெட்ரோ ரயில்’: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 11 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன, மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. டிசிஎஸ், ரிலையன்ஸ், சன்பார்மா, விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன்பெயின்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் முடிந்தன.

நிப்டியில் உலோகம் 0.07%, ஐடி 0.22% ஆகிய துறைப் பங்குகள் மட்டுமே பிற்பகுதியில் மீண்டன. மற்ற துறைகளான ஆட்டமொபைல், வங்கித்துறை, எரிசக்தி, எப்எம்சிஜி, கட்டுமானம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி துறைப் பங்குகள் சரிந்தன

click me!