
பிஎப் சந்தாதாரர்கள் தங்கள் மாத சந்தாவை வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டாம், தகவல்களைப் பரிமாற வேண்டாம் என்று இபிஎப்ஓ அமைப்பு எச்சரித்துள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி, இதன் வழியாக பணத்தை டெபாசிட் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இபிஎப்ஓ கேட்டுக்கொண்டுள்ளது.
தங்கப் பத்திரம் விலையை வெளியிட்டது ஆர்பிஐ! திங்கள்கிழமை விற்பனை தொடக்கம்
அது மட்டுமல்லாமல் இபிஎப்ஓ அமைப்பு தனது சந்தாதாரர்களிடம் ஒருபோதும் தனிப்பட்ட விவரங்களான பான் எண், யுஏஎன் எண், வங்கிக்கணக்கு, ஓடிபி எண் ஆகியவற்றை கேட்பதில்லை. வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் வாயிலாக விவரங்களைக் கேட்பதில்லை, பணத்தை டெபாசிட் செய்யக் கோருவதில்லை.
இதன் அர்த்தம் என்னவென்றால், யாரேனும் தொலைப்பேசியில் அல்லது செல்போனில் அழைத்து பிஎப் அமைப்பு சார்பில் சில அலுவல் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது, அதலால் கணக்கு எண், யுஏஎன் ஆகியவற்றைக் கேட்டால் கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிஎப் அமைப்பு ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ இபிஎப்ஓ ஒருபோதும் தனது சந்தாதாரர்களிடம் தனிப்பட்ட விவரங்களான ஆதார் எண், பான் எண், யுஏஎன், வங்கிக்கணக்கு, ஓடிபி விவரங்களைய தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது சமூக ஊடங்கள் வாயிலாவோ கேட்படாது” எனத் தெரிவித்துள்ளது.
இபிஎப்ஓ என்பது, தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கும் மத்திய அரசு அமைப்பாகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் புதிதாக இபிஎப்ஓ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை கடந்த நிதியாண்டின் மாத சராசரியைவிட 22 சதவீதம் அதிகமாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.