தங்கம் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சவரன் 40,500ரூபாய்க்கு கீழ் இல்லை
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சவரன் 40,500ரூபாய்க்கு கீழ் இல்லை
தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,070ஆகவும், சவரன், ரூ.40,560ஆகவும் இருந்தது.
எட்டா கனியாக மாறும் தங்கம்! மிடில் கிளாஸ் மக்கள் கவலை! இன்றைய விலை நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூ.5,065ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.40 ஆயிரத்து 520ஆக குறைந்துள்ளது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,065க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்த நிலையில் இன்று சற்றுக் குறைந்துள்ளது. இருப்பினும், சவரன் ரூ.40,500 என்ற உச்ச அளவிலேயே இருப்பது, நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினர், நகைவாங்க நினைப்போருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என்ற கணிப்பு, சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது போன்றவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கப் பத்திரம் விலையை வெளியிட்டது ஆர்பிஐ! திங்கள்கிழமை விற்பனை தொடக்கம்
இதனால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டை திரும்பப் பெறுவதால் சந்தையில் பெரும் சரிவு காணப்படுகிறது. தங்கத்தின் மீதும் முதலீடு செய்வது பாதுகாப்பானது எனக் கருதுவதால்தான் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருந்து வருகிறது. சர்வதேச சூழலைப் பொறுத்து இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மாற்றம் வரலாம்.
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 பைசா குறைந்து, ரூ.72.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.600 சரிந்து, ரூ.72,500 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.