மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடந்த 2 நாட்கள் சரிவுக்குப்பின் ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை முடித்தது.
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடந்த 2 நாட்கள் சரிவுக்குப்பின் ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை முடித்தது.
கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு 10000க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்தநிலையில் இன்று உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, உலக நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அந்நாட்டுஅரசு முடிவு எடுத்திருப்பதுதான். இது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையையும், பொருளாதாரம் பூரிப்படையும் என்ற மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
அஞ்சலக RD-யில் மாதம் ரூ5,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை தெரியுமா?
கடந்த வாரத்தில் உலகில் முக்கிய வங்கியான அமெரிக்க பெடரல் வங்கி, இங்கிலாந்து வங்கி, ஐரோப்பிய வங்கி ஆகியவை வட்டி வீதத்தை உயர்த்தியதால், அந்த பாதிப்பு ஆசியச்சந்தையிலும் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது. இருப்பினும், அமெரிக்காவில் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்துவருவதுதான். இதனால், பொருளாதார மந்தநிலைக்கு சாத்தியமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
தங்கப் பத்திரம் விலையை வெளியிட்டது ஆர்பிஐ! திங்கள்கிழமை விற்பனை தொடக்கம்
இதனால் முதலீட்டாளர்களுக்கு காலையில் இருந்தே நம்பிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதால், பங்குச்சந்தையில் உயர்வு காணப்பட்டது. மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 468 புள்ளிகள் உயர்ந்து, 61,806 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 151 புள்ளிகள் அதிகரி்த்து 18,420 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது.
வருகிறது ‘வந்தே மெட்ரோ ரயில்’: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் 4 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிந்தன, மற்ற 26 பங்குகள் லாபத்தில் முடிந்தன. இன்போசிஸ், டிசிஎஸ், சன்பார்மா, இன்டஸ்இன்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் இழப்பில் முடிந்தன.
நிப்டியில் தகவல் தொழில்நுட்ப பங்குகளைத் தவிர அனைத்து துறை பங்குகளும் லாபத்தில் முடிந்தன. உலோகம், ஆட்டோமொபைல், எப்எம்சிஜி துறைபங்குகள் தலா ஒரு சதவீதம் லாபத்துடன் முடிந்தன
நிப்டியில், அதானி போர்ட்ஸ், எய்ச்சர் மோட்டார்ஸ், மகிந்திரா அன்ட்மகிந்திரா, பவர்கிரிட் கார்ப்பரேஷன், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் அதிகபட்ச லாபமடைந்தன. டிசிஎஸ்,ஓன்ஜிசி, சன்பார்மா, டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவில் முடிந்தன.