Post Office RD interest :அஞ்சலக RD-யில் மாதம் ரூ5,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை தெரியுமா?

By Pothy Raj  |  First Published Dec 19, 2022, 2:40 PM IST

தபால் நிலையத்தில் ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் ஆர்டி-யில் மாதம் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப்பின் நமக்குக் கிடைக்கும் தொகை வியப்புக்குரியதாக, இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்துவதாக இருக்கும்.


தபால் நிலையத்தில் ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் ஆர்டி-யில் மாதம் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப்பின் நமக்குக் கிடைக்கும் தொகை வியப்புக்குரியதாக, இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்துவதாக இருக்கும்.

மனிதர்களுக்கு சேமிப்புப் பழக்கம் இன்றியமையாதது. தனக்காக, குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக, குழந்தைகளின் கல்விக்காக, ஒவ்வொருவரும்  பல்வேறு வகைகளில், பல்வேறு முறைகளில் சேமிக்கிறோம், பணத்தைச் சேர்க்கிறோம்.

Tap to resize

Latest Videos

வருகிறது ‘வந்தே மெட்ரோ ரயில்’: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி

அவ்வாறு நாம் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக, நம்பகத்தன்மையாக, சேமிக்கும் பணத்துக்கு நல்ல வருமானம் கிடைக்கக்கூடியதாக இருத்தல் அவசியம்

அதிகமான வட்டிக்குஆசைப்பட்டு தனியார் சீட்டுநிறுவனங்களில் முதலீடு செய்து் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்த மக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அவ்வாறு செய்யாமல் மக்களுக்கு நூற்றாண்டுகளாக நம்பிக்கையளிக்கும் அஞ்சலகங்களில் நம்முடைய பணத்தைச் சேமித்தால் பணமும் பாதுகாப்பாக இருக்கும், சேமிக்கும் பணத்துக்கு வருமானமும் கிடைக்கும்.

இந்தியாவில் உள்ள கடைக்கோடி மக்கள் வரை நம்பிக்கையைப் பெற்றது அஞ்சலகம். அஞ்சலகத்தில் ஏராளமான சேமிப்புத் திட்டங்கள்,சிறுசேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அதில் ஒவ்வொருவரும் தங்களின் வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

2 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு

இதில் முக்கியமான அஞ்சலகத்தில் நடத்தப்படும் ஆர்டி எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டமாகும். இந்த ஆர்டி திட்டத்தில் பணமும் பாதுகாப்பாக சேமிக்கப்படும், அந்தப் பணத்துக்குகனிசமாஅளவு வட்டியும் கிடைக்கும். பரஸ்பர நிதிதிட்டம் போல், எஸ்ஐபி திட்டம் போல் இல்லாமல் மாதந்தோறும் நாம்செய்யும் முதலீட்டுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பின்நல்ல பலன் கிடைக்கும்.

பரஸ்பர நிதித்திட்டங்களில் முதலீடு செய்தால் வட்டி, லாபம் அதிகமாக கிடைக்கும் என்றாலும், சந்தையின் இடர்பாடுகளுக்கு உட்பட்டது. நாம் முதலீடு செய்யும் பணம் பெருகலாம் அல்லது தேக்கமடைந்தும் போகலாம். ஆனால் அஞ்சலகத்தின் ஆர்டி திட்டத்தில் சிறுகச் சிறுக நாம் செய்யும் முதலீடு, முதிர்ச்சிகாலத்தில் எதிர்பார்க்காத பலன்களை வழங்கும். எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையாது, பணத்தைப் பற்றிய கவலையும்இல்லை.

உதாரணமாக, ஒருவர் மாதம் தோறும் அஞ்சலத்தில் ஆர்டி கணக்கில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அவரின் பணத்துக்கு 5.8% வட்டி கிடைக்கும். இது SIP திட்டத்தில் 12சதவீதம் வட்டிகிடைக்கும் என்றாலும் இது சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டது

தங்கப் பத்திரம் விலையை வெளியிட்டது ஆர்பிஐ! திங்கள்கிழமை விற்பனை தொடக்கம்

அஞ்சலத்தில் ஆர்டி மூலம் ஒருவர் மாதம் ரூ.5ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்றால், அவர் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சம் செலுத்தியிருப்பார். ஆனால், 5 ஆண்களுக்குப்பின் முதிர்ச்சி நேரத்தில் அவரின் கைவசம், கூடுதலாக ரூ.48,740 கிடைக்கும். அதாவது ரூ.3 லட்சத்து 40ஆயிரத்து 740 கிடைக்கும். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு ரூ.9ஆயிரம் வீதம் வட்டிகிடைக்கும். 

இதில் எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்தால் 12 சதவீதம் வட்டிகிடைக்கும், உங்கள் முதலீடு ரூ.1,12,432 வட்டியை பெற்றிருக்கும். இறுதியில் ரூ.4,12,432 கிடைக்கும். ஆனால், இது சந்தையின் இடர்பாடுகளுக்கு உட்பட்டது. ஒருவேளை அதிர்ஷ்டசாலியாக இருந்தால், நாம் சிப் திட்டத்தில் செய்யும் முதலீட்டுக்கு 15 சதவீதத்துக்கும் அதிகமாகக் கூட வட்டி கிடைக்கலாம்.

ஆதலால், பாதுகாப்பான முதலீட்டுக்கு, முதலீட்டுக்கு ஏற்ற வருமானத்துக்கு அஞ்சலக்தின் ஆர்டி சேமிப்பு என்றென்றும் நம்பிக்கையானது

click me!