Share Market Today: பாதாளத்தில் பாய்ந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 550 புள்ளிகள் வீழ்ச்சி! என்ன காரணம்?

By Pothy Raj  |  First Published Dec 20, 2022, 9:43 AM IST

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தை மிகவும் மோசமாகத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை வீழ்ந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தை மிகவும் மோசமாகத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை வீழ்ந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்
சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை 2023ம் ஆண்டில் உருவாகும், அமெரிக்காவுக்கும் 2023ம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கிறது என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்றார்போல், அமெரிக்காவில் சில்லறை விற்பனை குறைந்துள்ளது, மக்கள் செலவிடும் அளவு குறைந்துள்ளது போன்றவையும், வட்டிவீத அதிகரிப்பும் முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

ஏற்றதத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 468 புள்ளிகள் உயர்வு! உலோகம், ஆட்டோ பங்கு லாபம்

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, விமானப் போக்குவரத்தை தொடங்தியது கண்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், சீனாவில் கொரோனா வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. இதனால், சீனாவின் நிலை கண்டு முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவில் இன்னும் கொரோனா தாக்கம் குறையாதது முதலீ்ட்டாளர்களுக்கு அதிர்சியை ஏற்படுத்தியது.

அஞ்சலக RD-யில் மாதம் ரூ5,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை தெரியுமா?

அதற்குஏற்றார்போல் அமெரிக்கப் பங்குசந்தையும் நேற்று சரிவில் முடிந்தது, ஆசியச் சந்தையிலும் மந்தமான போக்கு காணப்பட்டது. இதன் எதிரொலி இந்தியச் சந்தையிலும் இருந்ததால், காலை வர்த்தகம் தொடங்கியது முதல் சந்தையில் சரிவு காணப்படுகிறது. இதனால் காலை வர்த்தகம் தொடங்கியது முதல் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் பங்குகளை விற்பதிலேயே ஆர்வம் காட்டி  வருகிறார்.

காலை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 526 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 61,279 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 168 புள்ளிகள் குறைந்து, 18,252  புள்ளிகளிலும் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி பங்குகள் மட்டும லாபத்தில் உள்ளன, மற்ற 28 நிறுவனப் பங்குகளும் கடும் சரிவில் உள்ளன. 

பருப்புகளின் தோல் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து: ஜிஎஸ்டி கவுன்டில் கூட்டம் குறித்த முழுவிவரம்

நிப்டியில் உள்ள துறைகளில் ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, ஐடி, ஊடகம், ரியல் எஸ்டேட் ,உலோகத்துறை பங்குகள் சராசரியாக ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளன. மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி ஆகியவை சராசரியாக 0.80 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. 

click me!