தங்கத்தில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது. தங்கத்தில் முதலீடு செய்ய பலவகைகள் இன்று வந்துவிட்டநிலையில் நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், அதேநேரம் வருமானத்தையும் ஈட்டித் தருவதாக இருக்க வேண்டும்.
தங்கத்தில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது. தங்கத்தில் முதலீடு செய்ய பலவகைகள் இன்று வந்துவிட்டநிலையில் நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், அதேநேரம் வருமானத்தையும் ஈட்டித் தருவதாக இருக்க வேண்டும்.
தங்கம் என்பது விரைவாக பணமாகும் பொருள். எந்த நாட்டிலும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு சர்வதேச கமாடிட்டியாகப் பார்க்கப்படுகிறது. ஆதலால், தங்கத்தை முதலீடு செய்வது என்பது குறுகிய காலத்திலும், நீண்டகாலத்திலும் பாதுகாப்பானதாக, லாபகரமானதாக மாற்றுவது அவசியம்.
தகுதியிருந்தும் கடனைச் செலுத்தாத டாப்50 நபர்கள் மட்டும் ரூ.93 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு பாக்கி
இன்றைய சூழலில் தங்கத்தை நேரடியாக வாங்காமல் டிஜிட்டல் ரீதியாக வாங்குவது, முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. டிஜிட்டல் ரீதியாக தங்கத்தை வாங்கி வைத்தாலும் அதன் மூலம் கிடைக்கும் வட்டி என்பது சீராக வரும்.
இதில் ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதி அமைப்பு வெளியிடும் கோல்ட் இடிஎப் எனப்படும் எக்சேஞ்ச் டிரேடடன் பன்ட் ஆகும். இந்த இரு திட்டங்களில் எதில் முதலீடு செய்தால் நமக்கு லாபகரமானதாக இருக்கும், பலன் அளிக்கும் என்பதைப் பார்க்கலாம்.
அஞ்சலக RD-யில் மாதம் ரூ5,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை தெரியுமா?
கோல்ட் இடிஎப்(GOLD ETF)
தங்கத்தை கோல்டு இடிஎப்பில் பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்யலாம் அதாவது டீமேட் கணக்கு வடிவத்தில் அல்லது காகித வடிவத்தில் தங்கத்தை முதலீடு செய்யலாம். கோல் இடிஎப் முறையில் டீமேட் கணக்கு தொடங்கி, ஒரு கிராம் முதல் எத்தனை கிலோ வேண்டுமானாலும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வர்த்தகம் செய்யலாம். இந்த முறையில் தங்கத்தை சேமித்து வைப்பது குறித்தும், திருட்டு பயம் குறித்தும் முதலீட்டாளர் கவலைப்படத் தேவையில்லை. தங்கம் என்பது டீமேட் வடிவத்தில் இருக்கும்
இந்த முறையில் நாம் முதலீடு செய்தால், தங்கத்தை நேரடியாக வாங்காமல், எலெக்ட்ரானிக் வடிவத்தில் வாங்கி தங்கத்தை வர்த்தகம் செய்யலாம். கோல்ட் இடிஎப்பில் முதலீடு செய்யும் போது 2.5 ஆண்டுக்குள் விற்பனை செய்தால் குறுகியகால ஆதாயத்துக்கு வரி செலுத்த வேண்டியதிருக்கும்.
இரண்டரை ஆண்டுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்தால் நீண்டகால ஆதாய வரியாக 20% செலுத்த வேண்டியதிருக்கும்.
தங்கப் பத்திரம் விலையை வெளியிட்டது ஆர்பிஐ! திங்கள்கிழமை விற்பனை தொடக்கம்
தங்களுடைய முதலீடுகள் எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்ற முடியும் என்று விரும்புவோர், பங்குச்சந்தைகளில் வர்த்தகத்தின் நெகிழ்வுத்தன்மையை விரும்பும் முதலீட்டாளர்கள், கோல்ட் இடிஎப் முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
தங்கப்பத்திரத் திட்டம்(Sovereign Gold Bonds )
மத்திய அரசால் ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்படுவது தங்கப் பத்திரம் திட்டமாகும். இதில் ஒரு கிராம் சுத்த தங்கம் மதிப்பிலிருந்து ஒருவர் 4 கிலோ வரையிலும் அறக்கட்டளை, நிறுவனங்கள் 20 கிலோ வரையிலும் முதலீடு செய்யலாம்.
இந்த முதலீட்டுக்கு குறைந்தபட்ச வட்டி வழங்கப்படும். இந்த முதலீட்டுக் காலம் முடிந்தபின் அப்போது தங்கத்தின் மதிப்பு என்னவோ அதன் அடிப்படையில் பணம் வழங்கப்படும்
நீண்ட காலத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், வரிச்சலுகை பெற விரும்புவோர் தங்கப் பத்திரத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு இருமுறை 2.5% மட்டுமே வட்டி கிடைக்கும். 8 ஆண்டுகள் அடிப்படையில் இந்த தங்கப்பத்திரங்கள் கிடைக்கும், 5வது ஆண்டிலிருந்து நாம் பலன்களைப் பெற முடியும்.
நிலையான வட்டிவருமானம் வரவேண்டும் என்று விரும்புவோர் தங்கப் பத்திரத்தில் சேமிக்கலாம். இந்த திட்டம் மத்தியஅரசால் நடத்தப்படுவதால் முதலீட்டுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும். தங்கப்பத்திரங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டால், அந்த பலன்களைப் பெறுவதற்கு வரி ஏதும்பிடிக்கப்படாது.