Share Market Today: பங்குச்சந்தையில் கரடி ராஜ்ஜியம்:சென்செக்ஸ் 60ஆயிரமாகச் சரிவு! நிப்டி வீழ்ச்சி

By Pothy RajFirst Published Dec 22, 2022, 4:09 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்துக்கொண்டன. 

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்துக்கொண்டன. 

ஐரோப்பிய பங்குச்சந்தை, அமெரிக்க பங்குச்சந்தை நேற்று உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தையின் ஏற்றம்,ஆசியச் சந்தையிலும் எதிரொலித்து உயர்வுடன் முடிந்தது.

இவை அனைத்தையும் கவனித்த இந்திய முதலீட்டாளர்கள் காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே உற்சாகமாகக் காணப்பட்டனர். இதனால் வர்த்தகம் தொடங்கு முன்பே மும்பை பங்குச்சந்தை 300 புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியபின்பும் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. 

முதலீட்டாளர்களுக்கு நிம்மதியளித்த பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி உயர்வு

ஆனால் கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி அவசரஆலோசனை மேற்கொள்வது என்றசெய்தியால் மீண்டும் லாக்டவுன் வருமோ என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. அதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கியின் நிதிக்குழு உறுப்பினர்கள் வட்டிவீதத்தை உயர்த்துவதை நிறுத்தத் தேவையில்லை. 

நவம்பர் மாதம்தான் பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது, ஆனால், ஒட்டுமொத்தமாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்துவரும் நிதிக்கொள்கை கூட்டத்திலும் ரிசர்வ்வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற அச்சமும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பங்குகளை வாங்குவதைவிடுத்து லாபநோக்கம் கருதி விற்பனை செய்தனர்.

இதனால் மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 241 புள்ளிகள் குறைந்து, 60,826 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 71 புள்ளிகள் சரிந்து, 18,127 புள்ளிகளில் நிலைபெற்றது.

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: காரணம் என்ன? சென்செக்ஸ், நிப்டி ஏறுமுகம்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 6 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் சென்றன மற்ற 24 நிறுவனப் பங்குகளும் சரிந்தன. அல்ட்ராடெக் சிமெண்ட், சன்பார்மா, ஏசியன்பெயின்ட்ஸ், இன்போசிஸ், கோடக்வங்கி, பார்திஏர்டெல் நிறுவனங்கள் லாபமடைந்தன.

நிப்டியில் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டுமே லாபமும் இல்லாமல் இழப்பும் இல்லாமல் தப்பித்தன. மற்றவகையில் அனைத்துதுறைப் பங்குகளும் சரிவில் முடிந்தன. குறிப்பாக ஆட்டோமொபைல், உலோகம், பொதுத்துறை வங்கிப் பங்குகள் 1சதவீதத்துக்கும் மேலாகச் சரிந்தன


 

click me!