தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400க்கு மேல் சரிந்துள்ளது.
தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400க்கு மேல் சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 58 ரூபாயும், சவரனுக்கு 464 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,124ஆகவும், சவரன், ரூ.40,992ஆகவும் இருந்தது.
தங்கம் விலை தொடர் உயர்வு! சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது: இன்றைய நிலவரம் என்ன
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து ரூ.5,066ஆகவும், சவரனுக்கு 464 ரூபாய் சரிந்து ரூ.40 ஆயிரத்து 528ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,066க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த இரு நாட்களாக அதிகரித்து நகைப் பிரியர்களையும், நடுத்தரக் குடும்பத்தினரையும் கலக்கத்தில் வைத்திருந்தது. ஆனால், இன்று சவரனுக்கு 464 குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளித்துள்ளது. கடந்த 2 நாட்களாக 472 உயர்ந்தநிலையில் இன்று அதற்கு ஏறக்குறைய இணையாக குறைந்துள்ளது.
தங்கம் விலை கொஞ்சூண்டு குறைவு! நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல்! நிலவரம் என்ன?
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.70ஆக இருந்தநிலையில் இன்று ஒரு ரூபாய் குறைந்து, ரூ.73.70 ஆகச் சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.ஆயிரம் சரிந்து, ரூ.73,700 ஆக வீழ்ந்துள்ளது