Share Market Today: பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்ன? ரூ.2.70 லட்சம் கோடி அம்போ! சென்செக்ஸ் நிப்டி வீழ்ச்சி

By Pothy RajFirst Published Jan 4, 2023, 3:55 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த 2 நாட்களாக ஏற்றத்துடன் சென்றநிலையில் இன்று பள்ளத்தில் பாய்ந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.2.70 லட்சம் கோடி குறைந்தது

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த 2 நாட்களாக ஏற்றத்துடன் சென்றநிலையில் இன்று பள்ளத்தில் பாய்ந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.2.70 லட்சம் கோடி குறைந்தது

பங்குச்சந்தையில் காலை ஏற்பட்ட சரிவு மாலை வரை தொடர்ந்ததால், சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்தன.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கு சில காரணங்கள் உள்ளன 

பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: என்ன காரணம்?

1.    அமெரிக்க பெடரல் வங்கியின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு முதலீட்டை தவிர்த்தனர்.

2.    2023ம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் நாடுகளில் அமெரிக்காவும் இருக்கிறது என்று சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்திருப்பது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

3.    அமெரிக்கப் பங்குச்சசந்தை புத்தாண்டு விடுமுறை முடிந்து நேற்று தொடங்கியநிலையில் சரிவுடனே முடிந்தது. ஆப்பிள், டெஸ்லா பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது

4.    அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த ஒருவாரத்தில் மட்டும் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து ரூ.6605 கோடியை திரும்ப பெற்றுள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

5.    டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்து, டாலர் மதிப்பு வலுவடைந்து வருவது

உலகில் மூன்றில் ஒருபகுதி நாடுகள் 2023-ல் பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும்: ஐஎம்எப் எச்சரிக்கை

ரூ.270 லட்சம் கோடி அம்போ

இந்த காரணிகளால்தான் பங்குச்சந்தையில் இன்று சரிவு காணப்பட்டது. முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.281.90 லட்சம் கோடியாக இருந்தநிலையில் இன்றைய சரிவால் ரூ.2.70 லட்சம் கோடி குறைந்துள்ளது.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 636 புள்ளிகள் உயர்ந்து, 60,657 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 187 புள்ளிகள் சரிந்து 18,042 புள்ளிகளில் முடிந்தது.

பட்ஜெட்டில் உரம், உணவு மானியத்தை ரூ.3.70 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டம்

நிப்டியில் அனைத்து துறைகளும் சரிவில் முடிந்தன. அதிகபட்சமாக உலோகத்துறை 2%, அதைத்தொடர்ந்து பொதுத்துறைவங்கி 1.73%, எரிசக்தி 1.39%, வங்கி 1.04%, ஐடி 0.89% எனச் சரிந்தன.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் மாருதி சுஸூகி, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தவிர மற்ற 28 நிறுவனப் பங்குகளும் சரிவில் முடிந்தன.
 

click me!